சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நிர்வாக குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசியபோது, “கட்சியின் முக்கிய நிர்வாகிகளான தங்கவேலு, மௌரியா, செந்தில் ஆறுமுகம், அருணாச்சலம், முரளி அப்பாஸ் உள்ளிட்ட செயற்குழு மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த செயற்குழு மற்றும் நிர்வாக குழு கூட்டத்தில் ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முக்கிய தீர்மானங்களை பொறுத்தவரையில். 2018ஆம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்டபோது பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்தவர் அருணாச்சலம்.
மீண்டும் நமது கட்சியில் இணைந்த ஆ. அருணாச்சலம், ‘பாரத் ஜோடா யாத்ரா’, ‘ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரம்’ ஆகிய முன்னெடுப்புகளில் நமது கட்சியினர் அனைவரையும் ஒருங்கிணைத்து, தோழமைக் கட்சிகளுடன் ஒத்திசைந்து சிறப்பான பங்களிப்பினை வெளிப்படுத்தினார்.
தகுந்த நேரத்தில் தாய் வீட்டிற்குத் திரும்பிய செயல்வீரர் ஆ. அருணாச்சலத்தை நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அடங்கிய இந்த சபை மனதாரப் பாராட்டுகிறது. கமல்ஹாசன் தற்போது கூடுதல் பொறுப்பாக வகித்து வரும் பொதுச் செயலாளர் பொறுப்பிற்கு ஆ. அருணாச்சலம் M.A., B.L., தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
மக்கள் நீதி மய்யத்திற்கு மகளிரணியை வலுப்படுத்தும் வகையில் மகளிரணியுடன், மய்யம் மாதர் படை இணைக்கப்படுகிறது. மார்ச் 8 ஆம் தேதி சர்வதேசப் பெண்கள் தினத்தை மக்கள் நீதி மய்யத்தின் மகளிரணி சிறப்பான முறையில் கொண்டாட முடிவெடுக்கப்படுகிறது.
கலை, இலக்கிய, பண்பாட்டுச் செயல்பாடுகளை முன்னெடுப்பதற்காகவும், வேறு சில பொதுநலச் சேவைகளை மேற்கொள்ளவும் ‘கமல் பண்பாட்டு மய்யம்’ எனும் இலாப நோக்கமற்ற, அரசியல் நோக்கமற்ற அறக்கட்டளையை தொடங்கவுள்ளது. 2024 பாராளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் வகையில் மாநிலம் முழுவதிலும் பூத் கமிட்டிகள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும். நமது கொள்கைகளையும், திட்டங்களையும் கடைக்கோடி தமிழருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் மீடியா & ஐடி அணி நான்காகப் பிரிக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: 'இந்திய மக்களின் சராசரி வயது 29.. எம்.பி.க்களின் சராசரி வயது 54; அவை மாறணும்' மாணவர்கள் மத்தியில் கமல் உரை