ETV Bharat / state

TN Arts College: கலை, அறிவியல் கல்லூரி விண்ணப்ப தேதி அறிவிப்பு! - Tamil Nadu Govt

தமிழ்நாட்டில் தனியார் சுயநிதி மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் துவங்கும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 27, 2023, 12:32 PM IST

சென்னை: தமிழகத்தில் மார்ச் 13-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெற்று முடிவடைந்தன. பொதுத்தேர்வு முடிவுகள் வரும் எட்டாம் தேதி வெளியிடப்படும் என அரசுத் தேர்வுத்துறை நேற்று அறிவித்துள்ளது.

இதனிடையே வரும் கல்வியாண்டிற்கான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் வரும் மே 1ம் தேதி முதல் தொடங்க உள்ளது. தமிழகத்தில் உள்ள 633 சுயநிதி தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன.

தமிழகத்தில் உள்ள சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மே 1ம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் துவக்கப்படும் எனவும். தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மே 9-ஆம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

மாணவர்கள் அந்தந்த கல்லூரியின் இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக தங்களுடைய விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மே 8-ஆம் தேதி பொதுத்தேர்வுகள் முடிவுகள் வெளியான பின்பு உரிய மதிப்பெண் சான்றிதழ்களுடன் மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவேண்டும் என தனியார் கல்லூரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பொறுத்த வரையில் பொதுத்தேர்வு முடிவுகள் மே 8-ஆம் தேதி வெளியிட்ட பின்னர் மே ஒன்பதாம் தேதி முதல் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம் என உயர்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் அடுத்த பத்து நாட்களுக்கு மாணவர்கள் விண்ணப்பம் செய்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும் எனவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.