சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் சிவனார்தாங்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் சு.செல்வம் காந்தி ஜெயந்தி முன்னிட்டு 'ஒற்றுமையே வலிமை' என்பதை வலியுறுத்தி பிரஷ்க்கு பதிலாக இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் "மதக் குறியீடுகள் பயன்படுத்தி காந்தி ஓவியத்தை வரைந்தார்.
தேசத்தின் தந்தை மகாத்மா காந்தி, தற்போது குஜராத்தின் ஒரு பகுதியாக இருக்கும் போர் பந்தரில் 1869ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி பிறந்தார். இந்த ஆண்டு அவரது 154வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் சுதந்திர இயக்கத்திற்கும், வாழ்க்கைக்கான அவரது தத்துவங்களுக்கும் மகத்தான பங்களிப்பைச் செய்த, பிறந்த நாளை நினைவுகூரும் வகையில், காந்தி ஜெயந்தி ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
இந்தியாவில் மக்கள் மொழி, மதம், கலாச்சாரம், பண்டிகைகள் போன்றவற்றில் வேறு பட்டவர்கள், இத்தனை வேறுபாடுகள் இருந்தாலும், குறிப்பிடத்தக்க ஒற்றுமை உணர்வு நம்மிடையே நிலவுகிறது. அதனால்தான் இந்தியா வேற்றுமையில் ஒற்றுமையை வெளிப்படுத்தும் தேசமாக உலகின் முன் முன்வைக்கப்படுகிறது. இத்தனை வேறுபாடுகள் இருந்தபோதிலும் இந்தியாவில் அனைவரும் தேசத்தின் மீது மிகுந்த அன்புடன் வாழ்கின்றனர்.
இந்த அன்புதான் மக்களை ஒன்று சேர்க்கிறது, இந்திய மக்களை ஒன்றிணைப்பதில் தேசியமும் தேச பக்தியும் முக்கிய பங்கு வகிக்கின்றன. வேற்றுமையில் ஒற்றுமை ஒரு தேசத்தின் நல்லிணக்கத்தையும், அமைதியும் அதிகரிக்கிறது, அது ஒரு தேசத்தின் ஒற்றுமையின் வலிமையைக் காட்டுகிறது.
இதனை உணர்த்தும் விதமாக ஓவிய ஆசிரியர் செல்வம், காந்தி ஜெயந்தியை முன்னிட்டும், இந்தியத் தேசத்தின் 'ஒற்றுமையை வலியுறுத்தியும்' பிரஷ் ஏதும் பயன்படுத்தாமல், மூன்றும் மதங்களான இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் "மத அடையாளக் குறியீடுகளை" பயன்படுத்தி காந்தியடிகள் ஓவியத்தை எட்டு நிமிடங்களில் வரைந்து ஓவிய ஆசிரியர் செல்வம் அசத்தியுள்ளார் வரைந்தார். இந்த ஓவியத்தைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்களுக்குப் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த ஓவியம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளி வாகனத்தை காரணம் காட்டி மகளிர் உரிமைத் தொகை மறுப்பா? - ஈரோடு பெண் கண்ணீர் மல்க கோரிக்கை!