சென்னை வடபழனியில் நாடக நடிகர் சங்கத்தினரை சந்தித்து சுவாமி சங்கரதாஸ் அணியின் பொதுச்செயளாளர் வேட்பாளர் ஐசரி கணேஷ் ஆதரவு கோரினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஐசரி கணேஷ், திட்டமிட்டபடி 23ஆம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். தேர்தலை எப்போது நடத்தினாலும் சந்திக்க தயாராக உள்ளோம். ஆனால் தேர்தல் அலுவலர் நியாயமான முறையில் தேர்தலை நடத்துவார் என்ற நம்பிக்கை இல்லை என்றார்.
மேலும், பாண்டவர் அணிக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் தேர்தல் நடத்தும் இடம் குறித்து இரண்டு நாட்களுக்கு முன்பே நோட்டீஸ் வழங்க வேண்டும் என்ற விதி பின்பற்றப்படுமா என சந்தேகம் உள்ளது. நடிகர் சங்கத் தேர்தல் அவசர கதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் நடத்த பச்சையப்பன் கல்லூரி கந்தசாமி கல்லூரி உள்ளிட்ட இடங்களை தங்கள் அணி பரிந்துரை செய்துள்ளோம் என்றார்.