ETV Bharat / state

ஏஆர்டி நிறுவன மோசடி: நிறுவனர்களின் பகீர் வாக்குமூலத்தால் அதிர்ச்சி! - பண மோசடி

ஏஆர்டி நிறுவன மோசடி தொடர்பாக அதன் நிறுவனர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

Alvin and Robin are the owners of the company involved in money laundering
பண மோசடியில் ஈடுபட்ட நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஆல்வின் மற்றும் ராபின்
author img

By

Published : Jun 24, 2023, 2:05 PM IST

சென்னை: நொளம்பூர் பாரதி சாலையில் ஏ.ஆர்.டி ஜூவல்லரி என்ற பெயரில் நகைக்கடை செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஆல்வின் மற்றும் ராபின். தங்க நகை சேமிப்பு, தங்க நகைக் கடன் மற்றும் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் வாரம் 3 ஆயிரம் வீதம் 1 மாதத்திற்கு 12 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என கவர்ச்சிகரமான திட்டங்களை இந்நிறுவனம் அறிவித்தது. இதனை நம்பிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

மேலும் சிவகார்த்திகேயனை வைத்து பிரமாண்டமான திரைப்படம் எடுக்கப் போவதாகவும் கூறி பொதுமக்களை நம்ப வைத்துள்ளனர். அது மட்டுமல்லாமல், பொதுமக்கள் முதலீடு செய்த பணத்தில் ஏ.ஆர் மால் மற்றும் பல மாவட்டங்களில் நகைக் கடைகள் தொடங்கி தொழிலை பெருக்கி உள்ளனர்.

இதனையடுத்து சில நாட்கள் வட்டியை வாரி வழங்கி வந்த இந்நிறுவனத்தினர், பின்னர் வட்டி தராமல் பல ஆயிரம் கோடிகளை சுருட்டிக் கொண்டு தலைமறைவாகி உள்ளனர். இந்த நிறுவனத்தில் ஏமாந்த பொதுமக்கள் பலரும் நகைக்கடை, ஏ.ஆர் மால் என முற்றுகையிட்டபோது அவர்களை குண்டர்களை வைத்து தாக்கியதால் வேறு வழியின்றி அனைவரும் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஏ.ஆர்.டி நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஆல்வின், ராபர்ட் மற்றும் தொடர்புடைய ஏஜெண்டுகள் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து நிறுவனத்தின் தொடர்புடைய இடங்களில் தீவிர சோதனை நடத்தி ஏ.ஆர் மால் மற்றும் நகைக் கடைக்கு சீல் வைத்துச் சென்றனர்.

அதேநேரம், இந்த வழக்கில் முக்கிய நபர்களான ஆல்வின் மற்றும் ராபின் ஆகியோர் தொடர்ச்சியாக தலைமறைவாக இருந்து வந்ததால் அவர்களுக்கு எதிராக பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், தலைமறைவாக இருந்த முக்கிய நபர்களான ஏ.ஆர்.டி ஜுவல்லரி குழுமத்தின் உரிமையாளர்கள் ஆல்வின் மற்றும் ராபின் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட உரிமையாளர்கள் இருவரையும் 10 நாட்கள் போலீஸ் காவல் எடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியானது. இதன்படி, ஏ.ஆர்.டி நிறுவனம் மூலம் மோசடி செய்த பல கோடி ரூபாய் பணத்தில் தமிழ்நாட்டில் பல்வேறு கிளைகளை நிறுவி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனால் கிளைகளை வைத்துள்ள உரிமையாளர்களைப் பிடித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கிளைகளில் உள்ள நகைகள் மற்றும் பணத்தை ஏலம் விட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். அதேபோல், இவர்கள் மோசடி செய்த பணத்தின் ஒரு பாதியை உறவினர் ஒருவரிடம் கொடுத்து வைத்திருப்பது தெரிய வந்ததையடுத்து, அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், மோசடி செய்த பணத்தில் தென்காசி மாவட்டத்தில் கணேசன் என்பவருக்கு தங்க நகைக்கடை கிளை வைத்து கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கணேசனை கைது செய்து, நகைக்கடைக்கு சீல் வைத்தனர். ஆல்வின் மற்றும் ராபின் ஆகியோரின் 10 நாட்கள் போலீஸ் காவல் முடிந்ததும் இரு உரிமையாளர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சிறையில் அடைத்தனர்.

இதயும் படிங்க :திருப்பூரில் பயங்கர தீ... காதர்பேட்டையில் 50 கடைகள் எரிந்து நாசம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.