ETV Bharat / state

சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் நம்ம ஊரு திருவிழா - அமைச்சர் தங்கம் தென்னரசு - நம்ம ஊரு திருவிழா

பிரம்மாண்டமான நாட்டுப்புறக் கலை விழாவான நம்ம ஊரு திருவிழா சென்னை, ஈரோடு, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் ரூ. 6 கோடி மதிப்பீட்டில் நடத்தப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Our town festival, a huge folk art festival, will be held all over Tamil Nadu - Minister Thangam Tennarasu பிரம்மாண்டமான நாட்டுப்புறக் கலை விழாவான நம்ம ஊரு திருவிழா தமிழ்நாடு எங்கும்  நடத்தப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு கலை மற்றும் பண்பாடு, அருங்காட்சியகங்கள் தொல்லியல் துறையில் பல புதிய அறிவிப்புகளை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் வெளியிட்டார் Art and Culture Museums Department of Archaeology New Announcement by Minister Thangam Thennarasu in  Assembly

author img

By

Published : May 6, 2022, 11:09 AM IST

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று (மே.5) 2022-23ஆம் ஆண்டிற்கான போக்குவரத்து துறை, சுற்றுலாத்துறை மற்றும் கலை, பண்பாடுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. அதற்கு, துறை அமைச்சர்கள் பதிலளித்து, புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர். இதில், கலைப் பண்பாடு, அருங்காட்சியகங்கள் மற்றும் தொல்லியல் துறை குறித்த மானியக் கோரிக்கை விவாதத்தில் அதற்கான பதில் உரையை துறையின் அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்தார்.

கலை மற்றும் பண்பாடு, அருங்காட்சியகங்கள் தொல்லியல் துறையில் பல புதிய அறிவிப்புகளை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் வெளியிட்டார். அவற்றின் பட்டியல்.

அமைச்சர் தங்கம் தென்னரசு
அமைச்சர் தங்கம் தென்னரசு

கலை பண்பாட்டு துறை அறிவிப்புகள்:

1.பிரம்மாண்டமான நாட்டுப்புறக் கலை விழாவான நம்ம ஊரு திருவிழா சென்னை, ஈரோடு, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் ரூபாய் 6 கோடி மதிப்பீட்டில் நடத்தப்படும். இந்நிகழ்ச்சிகளில் பங்கு பெரும் கலைஞர்கள் மாவட்ட அளவில் விழாக்கள் நடத்தி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

2. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத் திட்டங்களுக்கான இணையவழிச் சேவைகள் தொடங்கும்.

3. பூங்காக்கள் கடற்கரைகள் அருங்காட்சியகங்கள் மற்றும் மக்கள் கூடும் பிற இடங்களில் ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி தமிழ்நாட்டின் நாட்டுப்புறப் மற்றும் செவ்வியல் கலைகள் வளர்க்கப்படும்.

4. தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தில் உள்ள திறந்தவெளி கலையரங்கம் ரூபாய் 1.43 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

5. கும்பகோணம் அரசு கவின்கலைக் கல்லூரியில் உள்ள கட்டடங்கள் ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

6. சென்னை அரசு கவின் கலைக் கல்லூரியின் பாரம்பரிய கட்டடம் மற்றும் இதர கட்டணங்கள் ரூபாய் 7.33 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.

7. கும்பகோணம் அரசு கவின்கலை கல்லூரியில் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகத்தின் விதிமுறைகளின்படி ரூபாய் 15.68 கோடி மதிப்பீட்டில் புதிய வசதிகளுடன் கூடிய புதிய கட்டடங்கள் கட்டப்படும்.

8. கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் அனைத்து கல்லூரிகள் இசை பள்ளிகள் மற்றும் ஜவகர் சிறுவர் மன்றங்கள் இசைக்கருவிகள் மின்னணு சாதனங்கள் துணை சாதனங்கள் கணினி கூடங்கள் மென்பொருட்கள் ஒலிப்பதிவு கூடங்கள் தளவாடங்கள் மற்றும் பிற வசதிகள் ரூபாய் 6 கோடி மதிப்பீட்டில் வழங்கி கற்பித்தலின் தரம் நவீனப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும்.

9. வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் கடலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளிக்கு ரூபாய் 1.60 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்படும்.

10. சென்னை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உள்ள பாரம்பரிய கட்டடமான பிராடி கேசில் ரூபாய் 2.9 கோடி மதிப்பீட்டில் மீட்டுருவாக்கம் செய்து புனரமைக்கப்படும்.

11. மாமல்லபுரம் அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரியின் சிற்ப அருங்காட்சியகம் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு மாணவர்களின் சிற்பங்களையும் ஓவியங்களையும் காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் மையம் ஏற்படுத்தப்படும்.

12. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் அலுவலக கட்டடம் கலைஞர்கள் விடுதி படங்கள் காட்சிக் கூடம் மற்றும் கலையரங்கம் ஆகியவை ரூபாய் 1.54 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

13. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் சென்னையிலும் தமிழ்நாட்டின் 10 பிற மாவட்டங்களிலும் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் நாட்டுப்புறக் கலைகளை காட்சிப்படுத்தும் கலை விழாவான பொங்கல் விழா நடத்தப்படும்.

14. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் ஆண்டு அரசு நல்கை ரூபாய் 3 கோடியாக உயர்த்தப்படும்.

சட்டப்பேரவை கூட்டத்தொடர்
சட்டப்பேரவை கூட்டத்தொடர்
தொல்லியல் துறை அறிவிப்புகள்:1. சிந்துவெளி முத்திரைகள் இருக்கும் குறியீடுகளுக்கும் இடையே உள்ள தொடர்பை ஆய்வு செய்வதற்காகப் பானை ஓடுகளில் பொறிக்கப்பட்டுள்ள குறியீடுகள் மற்றும் தமிழி எழுத்துக்களை ஆவணப்படுத்துதல் மின்பதிப்பாக்கம் ஆகிய பணிகள் ரூபாய் 77 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும்.

2. தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனத்தில் மரபு மேலாண்மை மற்றும் அருங்காட்சியகவியல் எனும் ஈராண்டு முதுநிலை பட்டயப் படிப்பு ரூபாய் 80 லட்சம் செலவில் அறிமுகப்படுத்தப்படும்.

3. புதியதாக அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களை சுற்றுலாத் தலங்களாக மேம்படுத்த உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் ரூபாய் 3 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.

4. அண்மையில் புயலால் சேதமடைந்து தரங்கம்பாடியில் உள்ள டேனிஷ் கோட்டையை ரூபாய் 65 லட்சம் செலவில் மறு சீரமைக்கப்படும்.

5. முற்கால பாண்டியர் காலத்து பத்து குடைவரைக் கோயில்கள் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களாக இந்த ஆண்டு அறிவிக்கப்படும்.

6. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் உதிரி சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுக்கள் போன்ற பல்வேறு தொல்லியல் கலைச் செல்வங்களை அதே இடத்திலோ அல்லது பாதுகாப்பான இடத்தில் வைத்து முறையாக பாதுகாக்க மாநில அரசு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.

7. ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் உள்ள சிந்துவெளி ஆய்வு மையத்திற்கு அகல் ஆய்வு மற்றும் பிற திட்டங்கள் மூலம் தொல்லியல் துறையால் உருவாக்கப்பட்ட அறிவுச் செல்வத்தின் அடையாளம் காணுதல் இணைத்தல் ஆவணப்படுத்தல் பாதுகாத்தல் மற்றும் பரப்புதல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்கு ரூபாய் 89 லட்சம் நிதி மானியமாக வழங்கப்படும்.

சட்டப்பேரவையில்  அமைச்சர் தங்கம் தென்னரசு

அருங்காட்சியங்கள் துறை அறிவிப்புகள்:

1. சென்னை அரசு அருங்காட்சியக படிமக் கூடங்கள் மிகச்சிறந்த அருங்காட்சியக நடைமுறைகளின் படி நல்ல அனுபவத்தை வழங்கும் வகையில் சிறப்பான காட்சி அமைப்புகளுடன் 7 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

2. சென்னை அரசு அருங்காட்சியக சின்னமாக திகழ்கிற அருங்காட்சியக கலையரங்கின் குளிர்சாதன கருவிகள் மின்னொளி சாதனங்கள் இருக்கைகள் மற்றும் தீ பாதுகாப்பு சாதனங்கள் ஆகியவற்றை மேம்படுத்தி மீண்டும் கலை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான பணிகள் ரூபாய் 3 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.

3. காஞ்சிபுரம் மாவட்ட அரசு அருங்காட்சியகம் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சுற்றுலாவில் மாற்றி அமைக்கப்படும் புதிய காட்சி கூடங்களுடன் மேம்படுத்தும் பணிகள் ரூபாய் 2 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.

4. நாகப்பட்டினம் மாவட்ட அரசு அருங்காட்சியகம் தற்போது செயல்பட்டு வரும் தனியார் கட்டடத்தில் இருந்து அரசுக்கு சொந்தமான பாரம்பரிய கட்டிடத்தை உருவாக்கி அங்கு மாற்றியமைக்கும் பணிகள் 1.4 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.

5. சென்னை அரசு அருங்காட்சியகம் தேசிய பாதுகாப்பு ஆய்வகம் ரூபாய் 50 லட்சம் செலவில் மேம்படுத்தப்படும்.

6.சென்னை அரசு அருங்காட்சியகம் பாரம்பரிய சுற்றுலா சுவரின் உடைந்த பகுதிகளை பழுது பார்த்து மீண்டும் பணிகள் 45 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும்.

இதையும் படிங்க: தமிழ் இசைக்கு திமுக அரசு உரிய முக்கியத்துவம் அளிக்கும் - அமைச்சர் தங்கம் தென்னரசு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.