திருச்சியைச் சேர்ந்தவர் முகமது அல்டாப்(24) இவர் குடும்பத்துடன் சென்னையில் தங்கி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அவரது தந்தையிடம் செல்போனில் பெண் குரலில் மர்ம நபர் ஒருவர் பேசி பழகியுள்ளார். அவரது தந்தையின் புகைப்படங்களை சித்தரித்து சமூக வலைதளத்தில் அனுப்பி விடுவேன் என மிரட்டி ரூபாய் 7 லட்சம் கேட்டதாக சென்னை முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் முகமது அல்டாப் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் டெலிகிராம் செயலி மூலம் பெண் குரலில் பேசி பெண் என நம்பவைத்து குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை பெற்றதும், பின்னர் அப்படங்களை ஆபாசமாக மாற்றி அனுப்பி வைத்து பணம் கேட்டு மிரட்டியதும் தெரியவந்தது.
இதையடுத்து பணம் தருவதாக கூறி ஓரிடத்திற்கு வரவழைத்து அங்கு வந்த நபரை போலீசார் மடக்கிப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் மிரட்டியவர் சென்னை ஏழு கிணறு பகுதியை செந்த அப்துல்லா(32) என்பது தெறியவந்தது.
அவரிடமிருந்து 1 செல்போன் மற்றும் 2 ஹார்டு டிஸ்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: வீட்டில் மாவா தயாரித்த வடமாநிலத்தவர் கைது..!