ETV Bharat / state

காரணமில்லாமல் கைது செய்யக் கூடாது: டிஜிபி திரிபாதி!

சென்னை: ஏழு ஆண்டுகளுக்கு குறைவாக சிறை தண்டனை கிடைக்கப்பெறும் குற்றங்களில் ஆதாரம் இல்லாமல் கைது செய்யக்கூடாது என டிஜிபி திரிபாதி அறிவித்துள்ளார்.

arrest-should-not-be-made-without-proper-cause-dgp-tripathi

author img

By

Published : Jul 30, 2020, 11:34 AM IST

சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்து சென்ற தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பல்வேறு தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் காவல்துறையினருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை டிஜிபி திரிபாதி விதித்து வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக அனைத்து மாவட்ட காவல் ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், ''குற்றவாளிகளின் சிறை தண்டனை குறைந்தபட்சம் ஏழு வருடங்களுக்கு மேல் இருந்தால் மட்டுமே கைது நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். குற்றத்தின் தன்மையை ஆராய்ந்து கைது செய்ய வேண்டிய அவசியத்தை எழுத்து மூலம் பதிவுசெய்து சம்மந்தப்பட்ட காவல் துறையினர் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

இதனை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமில்லாமல் கைது செய்யப்பட்ட குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்பு மாஜிஸ்திரேட் குற்றவாளிக்கு வழங்கப்படும் நீதிமன்ற காவல் ஏன் என்றும் விளக்கமளிக்க வேண்டும்'' என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஜாதி பெயரைச் சொல்லி துன்புறுத்தல்: ராணுவ வீரரின் மகள் கண்ணீர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.