சென்னைப் பல்கலைக்கழகம் 1980-1981 ஆம் ஆண்டு முதல் அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் ஆன்லைனில் தேர்வு எழுதி தேர்ச்சி பெறலாம் என்று அறிவித்திருந்தது. அதில் தொலைதூரக் கல்வி படிப்பில் சேர விண்ணப்பிக்காத பலரும் கடந்த 2020 டிசம்பரில் நடைபெற்ற ஆன்லைன் தேர்வில் முறைகேடாக பங்கேற்று தேர்வு எழுதினர்.
இந்த விவகாரம் சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு சான்றிதழ்கள் கொடுக்கும் நேரத்தில் தெரியவந்தது. முறைகேட்டில் ஈடுபட்ட 117 பேருக்கு சான்றிதழ்கள் வழங்குவதற்கு முன்பாக தேர்வுக் கட்டணம் குறித்து ஆய்வு செய்தபோது, அவர்களின் பெயர்கள் இல்லாததால் சான்றிதழ்களை ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தொலைதூரக் கல்வி மையங்களை நடத்துவோர் ரூ.3 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு மோசடியாக சான்றிதழ்கள் பெற்றுத்தர உதவியது தெரிய வந்தது.
இந்த மோசடியில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? அல்லது வேறு யாரும் தேர்வு எழுதி உள்ளார்களா? என்பதை கண்டுபிடிக்க விசாரணைக் குழுவை அமைத்து சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'ராகிங்கில் ஈடுபட மாட்டேன்' - ஆன்லைனில் உறுதி மாெழி தாக்கல் செய்ய உத்தரவு