சென்னை பல்லாவரம் ராணுவக்குடியிருப்பில் நேற்று உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரி பிரவீன் குமார் ஜோஷிக்கும் அவரின் கீழ் பணியாற்றிய ராணுவ வீரர் ஜக்சீர் சிங் என்பவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நள்ளிரவில் பிரவீன் குமார் தூங்கிக்கொண்டு இருந்தபோது, அங்கு வந்த ஜக்சீர் சிங் அவரைத் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் பிரவீன் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர் ராணுவ வீரர் ஜக்சீர் சிங் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு, தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.