ETV Bharat / state

பள்ளி மாணவி தற்கொலை: நீதி கேட்டு பாஜக போராட்டம் - அரியலூர் பள்ளி மாணவி தற்கொலை

பள்ளி மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் சென்னையில் நடைபெற்றது.

பாஜக போராட்டம்
பாஜக போராட்டம்
author img

By

Published : Jan 25, 2022, 10:26 PM IST

சென்னை: தஞ்சாவூரில் தனியார் பள்ளியில் படித்து வந்த அரியலூரைச் சேர்ந்த மாணவி, பள்ளியில் மதமாற்றம் செய்வதற்காக மன அழுத்தம் கொடுக்கப்பட்ட காரணத்தால் தற்கொலை செய்து கொண்டாதாகப் புகார் எழுந்தது.

இதையடுத்து இவ்விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாணவி படித்த பள்ளியின் நிர்வாகத்தினர், மற்றும் பலரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று(ஜன.25) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தின் போது கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக மாணவி மரணத்திற்கு சிபிஐ நீதி விசாரணை வேண்டும், மாணவியின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

பாஜக போராட்டம்
பாஜக போராட்டம்

மேலும், குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும் எனவும் கூறி, இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

போராட்டத்தின் போது பேசிய அண்ணாமலை, "பாஜக மற்றும் பல்வேறு அமைப்புகள் மக்களுக்குத் துணையாக தொடர்ந்து நீதி கேட்டு போராட்டங்களை நடத்தி வருகின்றன.

மாணவிக்கு பள்ளி நிர்வாகத்தினர் கழிப்பறையைச் சுத்தம் செய்வது முதல் கணக்கு வழக்கு பார்ப்பது வரை பல்வேறு பணிகளை கொடுத்துள்ளனர். விடுதியில் தங்கிப் படித்து வந்த மாணவிக்கு ஓய்வு எடுக்க விடாமல் செய்து தேர்வுக்குப் படிக்க விடாமல் தொல்லை தந்துள்ளனர்.

மதம் மாறினால் மட்டும்தான் இவ்வாறு செய்யமாட்டோம், இதை வெளியில் சொன்னால் பள்ளியை விட்டு நீக்கி விடுவோம் என்றும் பள்ளி நிர்வாகத்தினர் மாணவியை மிரட்டியுள்ளனர். இவை அனைத்தையும் மாணவி சுயநினைவுடன் தன் சொந்த குரலில் வீடியோ பதிவு செய்துள்ளார்.

பதிவில் உள்ள நியாயத்தைப் பற்றி கவலைப்படாமல் அப்படி ஒரு பதிவினை எடுத்து வெளியிட்டது தவறு என்று தமிழ்நாட்டின் ஆட்சியாளர்கள் கூறுவதைக் கேட்கும்போது அதிர்ச்சியாக உள்ளது.

தான் சாகும் நிலையில் கூட அந்த மாணவி பேசுவதற்கு ஆசைப்படுகிறார் என்றால், அவர் எவ்வளவு தூரம் பள்ளி நிர்வாகத்தால் மிரட்டப்பட்டு இருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சர் தன்னை நீதிபதியாக நினைத்துக்கொண்டு முன்கூட்டியே தீர்வுகளுக்கான முன்னுரை எழுதிக் கொண்டிருக்கிறார். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்" எனத் தெரிவித்தார்.

இந்த போராட்டத்தில் பொன் ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: தஞ்சை மாணவி தற்கொலையில் பாஜக அரசியல் செய்கிறது: கே.எஸ்.அழகிரி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.