ETV Bharat / state

கமல் வீடியோவிற்கு கருத்து தெரிவித்த அனிதா அண்ணன்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வீடியோவிற்கு அனிதாவின் அண்ணன் மணிரத்னம் கருத்து தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன்
author img

By

Published : Apr 14, 2019, 8:59 AM IST

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற 18ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தல் பரப்புரைகளில் திமுக, அதிமுக போன்ற பெரிய அரசியல் கட்சிகளும், மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் கட்சி போன்ற வளர்ந்து வரும் அரசியல் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தலைவர்களின் தேர்தல் பரப்புரைகளை தொலைக்காட்சியில் பார்த்து ஆத்திரமடையும் கமல், அதனை உடைத்துவிட்டு மக்களிடம் பேசுவது போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

மக்கள் பிரச்னைகளை முதன்மைப்படுத்தி உங்கள் வாக்கு யாருக்கு என கேள்வி எழுப்பியுள்ள கமல், ஏப்ரல் 18 யாருக்கு ஓட்டு போடப்போறீங்க? என சிந்திக்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கால மாற்றத்திற்கு ஏற்ப மாறிவரும் பரப்புரை வியூகங்களில், தற்போது தனது கட்சிக்கு வாக்களிக்குமாறு கமல் வெளியிட்டுள்ள வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.

இதற்கு கருத்து தெரிவிக்கும் வகையில் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய அண்ணன் #கமல் அவர்களின் உண்மையான ரசிகன் நான்.

நடிப்பிற்காக மட்டுமல்ல, திரையிலும் நிஜத்திலும் மரபுகளை உடைக்க நினைக்கும் கலைஞன், மற்றவர்கள் என்ன நினைத்தால் என்ன தனக்கு சரியென்று படுவதை செய்யும் துணிச்சல்காரன்.

ரசிகர் மன்றங்களை கலைத்து நற்பணி மன்றங்களாக மடைமாற்றம் செய்தவன்.

அவரைப் பார்த்துதான் 18 முறை இரத்ததானம் செய்துள்ளேன்.. உடல்தானம் செய்துள்ளேன்.

புதிதாக யார் அரசியலுக்கு வந்தாலும் மகிழ்ச்சிதான், அந்த வகையில் அண்ணன் கமல் அவர்களுக்கும் மக்கள் நீதி மய்யத்திற்கும் என் வாழ்த்துகள்.

அண்ணன் #கமல் சொன்னது போல யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதில் #நானும், எங்கள் குடும்பமும் தெளிவாகவே இருக்கிறோம்.

#பாசிச_பாஜக கூட்டணிக்கு ஒருபோதும் வாக்களிக்கக் கூடாது, என்பதில் அனிதா இறந்தபோது "திருமாவளவன்" இதை சும்மா விடக்கூடாது தாங்கள் கூறிய அதே #திருமாதான் எங்கள் தொகுதியின் வேட்பாளர்.

மத்திய அரசிடம் நீட் விலக்கு என்பதை நிர்பந்திக்கும் வல்லமை கொண்ட கட்சி,

சமூக நீதி நிலைநாட்டும் கட்சி.

மாநில உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்காத கட்சி.

தற்போதைய சூழலில் தமிழ்நாட்டின் குறைந்தபட்ச பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரே கட்சி திமுக மட்டுமே.

திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் வலியுறுத்தலின் காரணமாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நீட் விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது, எங்களுக்கு நம்பிக்கை தருவதாக உள்ளது,

ஆதலால் எங்களின் வாக்கு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் #தலைவர்_திருமா (தலைவர் என்ற பதத்திற்கு முழு தகுதியுடையவர்) அவர்களுக்கே.

என்றும் #கமல்_ரசிகன் என்று அப்பதிவில் தெரிவித்திருந்தார்.

Intro:Body:

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய அண்ணன் #கமல் அவர்களின் உண்மையான ரசிகன் நான்...

நடிப்பிற்காக மட்டுமல்ல, திரையிலும் நிஜத்திலும் மரபுகளை  உடைக்க நினைக்கும் கலைஞன்,மற்றவர்கள் என்ன நினைத்தால் என்ன தனக்கு சரியென்று படுவதை செய்யும் துணிச்சல்காரன்..

ரசிகர் மன்றங்களை கலைத்து நற்பணி மன்றங்களாக மடைமாற்றம் செய்தவன்...

அவரைப் பார்த்துதான் 18 முறை இரத்ததானம் செய்துள்ளேன்.. உடல்தானம் செய்துள்ளேன்..

புதிதாக யார் அரசியலுக்கு வந்தாலும் மகிழ்ச்சிதான், அந்த வகையில் அண்ணன் கமல் அவர்களுக்கும் மக்கள் நீதி மய்யத்திற்கும் என் வாழ்த்துகள்...

அண்ணன் #கமல் சொன்னது போல யாருக்கு வாக்களிக்க கூடாது என்பதில் #நானும், எங்கள் குடும்பமும்  தெளிவாகவே இருக்கிறோம்..

#பாசிச_பாஜக கூட்டணிக்கு ஒருபோதும் வாக்களிக்க கூடாது,என்பதில்......

அனிதா இறந்த போது "திருமாவளவன்" இதை சும்மா விடக்கூடாது தாங்கள் கூறிய அதே #திருமாதான்  எங்கள் தொகுதியின் வேட்பாளர்..

மத்திய அரசிடம் நீட் விலக்கு என்பதை நிர்பந்திக்கும் வல்லமை கொண்ட கட்சி,

சமூக நீதி நிலைநாட்டும் கட்சி, 

மாநில உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்காத கட்சி,

தற்போதைய சூழலில் தமிழகத்தின் குறைந்தபட்ச பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரே கட்சி திமுக மட்டுமே..

திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் வலியுறுத்தலின் காரணமாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நீட் விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது, எங்களுக்கு நம்பிக்கை தருவதாக உள்ளது,

ஆதலால் எங்களின் வாக்கு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் #தலைவர்_திருமா (தலைவர் என்ற பதத்திற்கு முழு தகுதியுடையவர்) அவர்களுக்கே...

என்றும் #கமல்_ரசிகன்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.