ETV Bharat / state

வரலாறு காணாத மழையை சந்திக்க போகின்றனவா தென் மாவட்டங்கள்? - chennai district news

சென்னை: தற்போது கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 1,000 மி.மீ தாண்டி மழை பதிவாகியுள்ளது. வருடம் முழுவதும் பெய்ய வேண்டிய மழை இப்போது பதிவாகியுள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் 60 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

வரலாறு காணாத மழையை சந்திக்க போகிறதா தென் மாவட்டங்கள்?

author img

By

Published : May 28, 2021, 10:29 PM IST

மார்ச் 1 முதல் இன்று (மே.28) வரை தமிழ்நாட்டில் மிக அதிகமாக கன்னியாகுமரி மாவட்டம், பெருஞ்சாணியில் 1,057 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதேபோன்று புத்தன் அணையில் 1,027 மி.மீ, சிற்றாறு இரண்டில் 1,008 மி.மீ பதிவாகியுள்ளது. மேலும் கோதையாறு, மாஞ்சோலை ஊத்து ஆகிய தென்பகுதிகளும் அதிக மழை பதிவாகியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை ஆண்டு தோறும் கோடைக் காலத்தில் அதிக மழை பெய்யும். கோடைக்காலம், தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை என மூன்று பருவகாலங்களிலும் அதிக மழையை கன்னியாகுமரி பெறும் சிறப்பைப் பெற்றுள்ளது.

பாபநாசம், தென்காசி, வால்பாறை, நீலகிரி ஆகிய பகுதிகளும் கோடைக் காலத்தில் நல்ல மழை பெய்யும். குறிப்பாக கன்னியாகுமரியில் மே மாதத்தில் தொடர்ந்து மழை பெய்யும்.

வரலாறு காணாத மழையை சந்திக்க போகிறதா தமிழ்நாடு?

கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில், 2021ஆம் ஆண்டைப் பொறுத்தவரை ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை தமிழ்நாட்டில் மிக அதிகமான மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டம் 736 மி.மீ, திருநெல்வேலி மாவட்டம் 605 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

தற்போது கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 1,000 மி.மீ தாண்டி மழை பதிவாகியுள்ளது. வருடம் முழுவதும் பெய்ய வேண்டிய மழை இப்போது பதிவாகியுள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் 60 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு இனிதான் பருவமழை ஆரம்பமாக உள்ளது. அதைத் தொடர்ந்து தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை பெய்ய இருப்பதால் இந்தாண்டு கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மூன்று தென் மாவட்டங்களில் அதிகமழை பதிவாகவுள்ளது. இனி இந்த மூன்று மாவட்டங்களிலும் மழை பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை.

சில பகுதிகள் வரலாறு காணாத மழையை சந்திக்கவும் வாய்ப்புள்ளது. விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை இந்த ஆண்டு நல்ல முறையில் வெப்பசலன மழையை எதிர்பார்க்கலாம்.

வட மாவட்டங்கள் மழையை பெறுவது எப்போது?

தென் மாவட்டங்கள் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் வட மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை வலுகுறையும்போது சேலம், திருச்சி, வேலூர், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும். வரும் வாரத்தைப் பொறுத்தவரை வட மாவட்டங்கள் நல்ல மழையை இம்மாவட்டங்கள் சந்திக்கவுள்ளன. சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், சேலம், திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: '+2 தேர்வு நிச்சயம்! ஆன்லைனில் நடத்தப்படாது' - அன்பில் மகேஷ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.