ETV Bharat / state

உடுமலைப்பேட்டை நகராட்சியில் 17 கோடி ரூபாய் ஊழல்.. நடவடிக்கை எடுக்க அரசுக்கு அறப்போர் இயக்கம் கோரிக்கை

author img

By

Published : May 15, 2023, 3:47 PM IST

உடுமலைப்பேட்டை நகராட்சியில் 16.81 கோடி ரூபாய்க்கு முறைகேடுகள் நடந்துள்ள நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு அறப்போர் இயக்கம் கோரிக்கை வைத்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை நகராட்சியில் ரூ. 16,81,89,165/- கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்துள்ளது. குற்றவாளிகள் மீது முதல் தகவல் அறிக்கை(FIR) பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளவும் மற்றும் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும் அரசுக்கு அறப்போர் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''உடுமலைப்பேட்டை நகராட்சியில் ஊழல் நடைபெற்றுள்ளது என புகார் எழுந்த நிலையில், உள்ளாட்சி நிதிதணிக்கை இயக்குநர் அவர்களின் அறிவுத்தலின் படி, 2013-14 முதல் 2018-19 வரையிலான காலத்தின், நகராட்சி கணக்குகள் மறுதணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மறுதணிக்கை நிறைவுற்று, மண்டல உள்ளாட்சி நிதி தணிக்கை, மண்டல இணை இயக்குநர்(திருப்பூர்) அவர்கள், அந்த மறுதணிக்கை அறிக்கையை 15.07.2021 அன்று நகராட்சி நிர்வாக இயக்குநர், உடுமலைபேட்டை நகராட்சி ஆணையர், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர், உதவி இயக்குநர் உள்ளாட்சி தணிக்கை உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுக்கு அனுப்பினார்.

RTI மூலம் மறுதணிக்கை அறிக்கை நகலைப் பெற்ற அறப்போர் இயக்கம், அதன் நடவடிக்கையையின் நிலையைத் தொடர்ந்து அறிய RTI தொடுத்தது. அதில் மறுதணிக்கை அறிக்கை அனுப்பி, சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகிய நிலையில் இன்று வரை, குற்றவாளிகள் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்படவில்லை. மேலும் குற்றத்தில் சம்மந்தபட்ட நபர்களில் ஒருவரான, உதவியாளர் தி.கண்ணன் என்பவர் மட்டும் தற்காலிகப் பணி நீக்கத்தில் இருப்பதாகத் தெரிகிறது. வேறு எந்த ஊழியர்கள் மீதும் துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கையோ அல்லது குற்றவியல் நடவடிக்கையோ மேற்கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது.

எனவே, லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறை, முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய அரசு உடனே அனுமதி தரவேண்டும். நகராட்சி உதவியாளராக இருந்த தி.கண்ணன் மற்றும் 2013-14 முதல் 2018-19 வரையிலான காலகட்டத்தில் நகராட்சி உயர்மட்ட அதிகாரிகளாக இருந்தவர்களையும் விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும். குற்றத்தில் ஈடுபட்ட அல்லது துணை புரிந்தவர்கள் அனைவர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிந்து (FIR) குற்றவியல் நடவடிக்கை மற்றும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மறுதணிக்கை அறிக்கை மூலம் உடுமலைப்பேட்டை நகராட்சியில் இழப்பு, முறைகேடு மற்றும் ஊழல் வகையில் தொகை ரூ.12,85,87,209 கோடியும், நிர்வாக கணக்கில் குறைபாடு வகையில் ரூ.3,96,01,956 தொகையும், என மொத்தமாக ரூ.16,81,89,165 சம்மந்தப்பட்டவர்களிடம் இருந்து மீட்கப்பட வேண்டும்’’என அறப்போர் இயக்கம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ஷிவ் தாஸ் மீனா, விஜிலென்ஸ் கமிஷனர் K கோபால், நகராட்சி நிர்வாக இயக்குநர் பி.பொன்னையா, உடுமலைப்பேட்டை நகராட்சி ஆணையர், இயக்குநர், விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகம் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க: 12 பேர் உயிரைக் குடித்த கள்ளச்சாராயம்.. தமிழகம் முழுவதும் தேடுதல் வேட்டை நடத்த டிஜிபி ஆணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.