ETV Bharat / state

லைட் மேன் தொழிலாளர்களுக்காக நிதி திரட்டும் ஏ.ஆர். ரகுமான் - லைட் மேன் தொழிலாளர்கள்

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது. தமிழ் சினிமாவில் பணியாற்றும் லைட் மேன்களுக்கு உதவும் வகையில் நிதி திரட்டுவதற்காக இந்த இசை நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார்.

லைட் மேன் தொழிலாளர்களுக்காக நிதி திரட்டும் ஏ.ஆர். ரகுமான்

author img

By

Published : Mar 18, 2023, 7:19 PM IST

சென்னை: இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இந்திய சினிமாவின்‌ முகமாக பார்க்கப்படுகிறார். 90-களில் தொடங்கி இப்போதுவரை இவரது இசை இல்லாமல் பலருக்கு நாட்கள் நகர்வதில்லை. இரட்டை ஆஸ்கர் விருது பெற்று தமிழனாக எல்லோருக்கும் பெருமை சேர்த்தவர். கடந்த ஆண்டு இவரது இசையில் ‘பொன்னியின் செல்வன்’ வெளியானது.

லைட் மேன் தொழிலாளர்களுக்காக நிதி திரட்டும் ஏஆர் ரகுமான்

அதுமட்டுமின்றி ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இவரது பாடல்கள் பெரிதும் பேசப்பட்டது. குறிப்பாக ‘மல்லிப்பூ’ என்ற பாடல் இணையத்தில் வைரல் ஆனது. அதன்பின் ‘பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்’, சிம்பு நடித்துள்ள ‘பத்து தல’ உள்ளிட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார். ‘பத்து தல’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (மார்ச் 18) சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை (மார்ச் 19) ஏ.ஆர். ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

தமிழ் சினிமாவில் பணியாற்றும் லைட் மேன்களுக்கு உதவும் வகையில் நிதி திரட்டுவதற்காக ஏ.ஆர். ரகுமான் இந்த இசை நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார். ஏ.ஆர். ரகுமானுக்கு கும்மிடிப்பூண்டி அருகே இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் ஸ்டூடியோ ஒன்று உள்ளது. இந்த ஸ்டூடியோவில் பணியாற்றி வந்த குமார் என்பவர் கடந்த மாதம் உயிரிழந்துவிட்டார்.

பணியின் போது தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஏ.ஆர். ரகுமான் சிலகாலம் ஸ்டூடியோவை மூடிவிட்டார். இதனை அடுத்து இதுபோன்ற லைட்டிங் கலைஞர்களின் மருத்துவ செலவிற்கு நிதி திரட்ட வேண்டும் என்று முடிவெடுத்தார். பெப்சி சங்கத்தின் உதவியுடன் நாளை இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

இதில் வரும் பணம் சினிமா லைட்டிங் கலைஞர்களின் மருத்துவ செலவிற்காக அந்த சங்கத்திடம் வழங்கப்பட்ட உள்ளது. பெப்சி அமைப்பில் ஏகப்பட்ட சங்கங்கள் இருந்தாலும் தொழிலாளர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழலே நிலவுகிறது. சமீபத்தில் கூட இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி வரும் விடுதலை படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ரோப் அறுந்து விழுந்து சண்டை பயிற்சி கலைஞர் உயிரிழந்தார்.

இது மிகப் பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்து மூன்று பேர் உயிரிழந்தனர். இப்படி உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழலில் பணியாற்றும் சினிமா தொழிலாளர்களுக்கு சங்கங்கள் எந்த விதத்திலும் பாதுகாப்பு அளிப்பதில்லை. போதிய நிவாரணமும் வழங்கப்படுவதில்லை. இந்த நிலையில் ஏ.ஆர். ரகுமான் இதுபோன்று உதவி செய்வது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

மற்ற நடிகர்களும் திரையுலக பிரபலங்களும் இதுபோன்று ஏதாவது ஒரு நிவாரண உதவியை வழங்க முன்வர வேண்டும் என்பதே அனைவரதும் கோரிக்கையாக உள்ளது. இது குறித்து ஏற்கனவே பெப்சி சங்கத் தலைவர் ஆர்.கே. செல்வமணி ஒரு பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'பொன்னியின் செல்வன் 2' முதல் சிங்கிள் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.