ETV Bharat / state

பாட்டிலுக்கு மேல் காசு வாங்கினா அவ்ளோ தான்.. அமைச்சர் கெடுபிடி உத்தரவு..!

மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி அதிகாரிகளுக்கு உத்தரவு!

author img

By

Published : May 26, 2023, 7:26 PM IST

சென்னை: மதுபான வகைகளை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யக்கூடாது என்றும் ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால் அதற்குரிய அபராதம் வசூலிக்கப்பட்டு, அப்பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் அனைத்து மண்டல முதுநிலை மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் மற்றும் பறக்கும் படை துணை ஆட்சியர்களுடன் தலைமைச் செயலகத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா, தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் விசாகன் மற்றும் தலைமை அலுவலக அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறும்போது, “அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் மதியம் 12 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 10 மணிக்குள் மூடப்பட வேண்டும். இதில் எவ்வித விதிமீறல்களும் இருக்ககூடாது. அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளிலும், அனைத்து பதிவேடுகளையும் தினசரி அடிப்படையில் பராமரிக்க வேண்டும்.

மாவட்ட மேலாளர்கள் அனைவரும் சிரத்தையுடன் செயல்பட வேண்டும்” எனக் கூறினார். மேலும், “மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் மதுபானங்களின் கூடுதல் விற்பனை விலைப் பட்டியல், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தெளிவாக தெரியும்படி மதுபானக் கடையின் முன்புறத்தில் வைக்கப்பட வேண்டும். இதனை அனைத்து மாவட்ட மேலாளர்களும் உறுதி செய்ய வேண்டும்.

முதுநிலை மண்டல மேலாளர்கள், மண்டல அளவிலான பறக்கும் படை அலுவலர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்கள் தத்தம் மாவட்டங்களில் சட்டவிரோதமாக மதுக்கூடங்கள் செயல்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு சட்டவிரோதமாக மதுக்கூடங்கள் ஏதேனும் செயல்படும் பட்சத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் கள்ளச்சாரயம், போலி மதுபானங்கள் விற்கப்படுவதை கண்டறியவும் மேலும், மதுபான கடைகளை தவிர மற்ற இடங்களில் மதுபானங்கள் விற்கப்படும் இடங்களை கண்டறிந்து, காவல்துறைக்குத் தெரிவித்து காவல் துறை மூலம் உரிய நடவடிக்கை எடுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், “மாவட்ட மேலாளர்கள் தினம்தோறும் எந்தவொரு மாவட்டத்திலும் மதுபான வகைகளை நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யக்கூடாது. ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால், அதற்குரிய அபராதம் வசூலிக்கப்பட வேண்டும். அப்பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, அனைத்து விதிமுறைகளையும் செவ்வனே செயல்படுத்தி சிறப்பாகச் செயல்பட அனைத்து நிலை அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: கரூரில் செந்தில் பாலாஜி ஐடி அதிகாரிகள் கார் மீது தாக்குதல்.. எஸ்.பி.அலுவலகத்தில் தஞ்சம்.. நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.