ETV Bharat / state

'முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே மக்களைக் காக்கும்' - பருவமழை குறித்து எச்சரித்த ராமதாஸ் - சென்னையில் வெள்ள பாதிப்பு

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்கவுள்ள நிலையில், பருவமழையால் அதிகம் பாதிக்கப்படும் சென்னையில் வெள்ளத்தடுப்பு பணிகள் இன்னும் முடிவடையாதது வெள்ள பாதிப்பிற்கு வழிவகுத்து விடுமோ? என்ற அச்சத்தை ஏற்படுத்துவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Approaching monsoon: flood protection Need to finish tasks quickly  Ramadoss

author img

By

Published : Oct 26, 2020, 11:54 AM IST

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த ஐந்து ஆண்டுகளில் இரு முறை கடுமையான வெள்ளத்தையும், ஒரு முறை ஓரளவு வெள்ளத்தையும் தமிழ்நாடு சந்தித்திருக்கிறது. கடுமையான வெள்ளம் ஏற்பட்ட இரு ஆண்டுகளில் தமிழ்நாடு மிகக்கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்கள், கடலூர் மாவட்டம் ஆகியவை பேரழிவுகளை சந்தித்தன. 2015, 2017 ஆகிய ஆண்டுகளில் பெய்த தொடர்மழையால் மேற்கண்ட மாவட்டங்கள் எத்தகைய அழிவுகளை சந்தித்தனவோ, அதே அளவு சேதங்களை, நடப்பாண்டில் கடுமையான மழை பெய்யும் பட்சத்தில் எதிர்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன.

இதற்கான காரணம், சென்னை, புறநகர் மாவட்டங்கள் மற்றும் கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தின் பாதிப்புகளை தடுப்பதற்கான பணிகள் இன்னும் முடிக்கப்படவில்லை என்பது தான். குறிப்பாக தலைநகர் சென்னையில் பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தடுப்பு பணிகள் இப்போதைக்கு முடிவடைவதற்கான வாய்ப்புகள் தென்படவில்லை. சென்னையின் முக்கியச் சாலைகளில் வெள்ளத்தடுப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பருவமழை தீவிரமடையும் போது, இந்த பணிகள் முடிவடையாத பட்சத்தில், மழை நீர் வெளியேற வழியில்லாமல் தண்ணீர் தேங்கவும், வெள்ளம் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

சென்னை மாநகர ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளாக திகழும் புறநகர் பகுதிகளில் ஒரே நாளில் 25 செ.மீ வரை மழை பெய்யக்கூடும். அவ்வாறு மழை பெய்யும் போது அவற்றை கடத்திச் செல்வதற்கான கட்டமைப்புகள் இல்லை. மழை நீர் வடிகால் பாதைகளை அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் சில இடங்களில் மீண்டும் முளைத்திருப்பதால் அவை பாதிப்புகள் ஏற்படுத்தும்.

மழை, வெள்ளம் ஏற்பட்ட பிறகு அவற்றிலிருந்து மக்களை மீட்க நடவடிக்கைகளை மேற்கொள்வது வேறு. மழையால் வெள்ளம் ஏற்படாமல் தடுப்பது வேறு. முன்னெச்சரிக்கைகள் நடவடிக்கைகள் தான் எப்போதும் மக்களைக் காக்கும். எனவே, சென்னையில் பெருமழை பெய்வதற்கு முன்பாக மாநகரின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத்தடுப்புப் பணிகளை விரைந்து முடிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், புறநகர் மாவட்டங்கள் மற்றும் கடலூர் மாவட்டங்களில் நீர் தேங்காமல் உடனடியாக வடியச் செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.