நீலகிரி மாவட்டத்தில் கரோனா ஊரடங்கு காலத்தில் தூய்மைப் பணியாளர்கள் சிறப்பாகப் பணியாற்றினர். இவர்களை கௌரவிக்கும்வகையில் சகாரா திட்டம் என்ற தலைப்பில் குன்னூரில் உள்ள பல்வேறு தன்னார்வ அமைப்பினர் ஒருங்கிணைந்து இவர்களுக்குத் தூய்மைக் காவலர்கள் எனப் பெயர் சூட்டி பாராட்டு விழா நடத்தினர்.
நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்து 189 பேருக்கு பாராட்டு கேடயம் வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ”தற்போது மகாராஷ்டிரா, கேரளாவில் கரோனா இரண்டாவது அலை அதிகரித்துள்ள நிலையில் நீலகிரிக்கு கேரளா உள்ளிட்ட பாதிப்பு அதிகம் உள்ள வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்கள் கட்டாயம் கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிவது உள்பட கரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்றாதவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 10 ரூபா நாணயம் எல்லாம் செல்லாது... சூழல் காப்பாளரை வருத்தியெடுத்த பங்க் ஊழியர்கள்!