ETV Bharat / state

24 மாவட்ட அரசுப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனம்!

தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் தற்காலிகமாக இடைநிலை, பட்டதாரி, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

24 மாவட்ட அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனம்

author img

By

Published : Jul 21, 2022, 8:15 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 13ஆயிரத்து 331 காலிப்பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கு பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதனடிப்படையில் தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள 4ஆயிரத்து 989 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ரூ.7ஆயிரத்து 500 தொகுப்பூதியத்திலும், 5ஆயிரத்து 154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ரூ.10ஆயிரம் தொகுப்பூதியத்தின் அடிப்படையிலும், 3ஆயிரத்து 188 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் 12ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தின் அடிப்படையிலும் நியமனம் செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டது.

24 மாவட்டங்களில் காலியாக இருந்த 11ஆயிரத்து 825 பணியிடங்களுக்கு ஒரு லட்சத்து 50ஆயிரத்து 648 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 28ஆயிரத்து 984 பேர் மட்டுமே ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்று இருந்தனர். இவர்களில் மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் தகுதியானவர்களைத் தேர்வு செய்து, பணியில் நியமிக்கப்பட்டவர்களின் பட்டியலை அந்தந்தப் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ளனர்.

அந்த உத்தரவில், பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்வு செய்த பணி நாடுநர்களுக்கு பள்ளி மேலாண்மைக்குழுவினர் ஒப்புதல் வழங்கிட வேண்டும். பணிநாடுநர்களை முற்றிலும் தற்காலிகப்பணி நியமனம் செய்ய உத்தரவிடப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட பள்ளியில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க ஏற்பாடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.