ETV Bharat / state

தமிழ்நாடு சிறுபான்மையின ஆணையத்தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம் - தமிழ்நாடு சிறுபான்மையின ஆணையத்தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம்

தமிழ்நாடு சிறுபான்மையின ஆணையத்தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம்

author img

By

Published : Jun 29, 2021, 12:04 PM IST

Updated : Jun 29, 2021, 1:47 PM IST

12:01 June 29

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் திருத்தி அமைக்கப்பட்டு, அதன் தலைவராக பீட்டர் அல்போன்ஸை நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

கருணாநிதியால் கொண்டுவரப்பட்ட சிறுபான்மையினர் ஆணையம்
தமிழ்நாட்டில் வாழும் மதம் மற்றும் மொழிவாரியான சிறுபான்மையினரின் நலன்களைப் பேணிக் காத்திடவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், கடந்த 1989ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 13ஆம் நாள், அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் 'தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம்' அமைக்கப்பட்டது.

அதற்குப் பிறகு, கடந்த 2010ஆம் ஆண்டு, மீண்டும் அன்றைய முதலமைச்சர் கருணாநிதியால், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையச் சட்டம், 2010 (விதி 21)இன் படி சட்டப்பூர்வ அதிகாரம் பெற்ற ஆணையமாக செயல்பட்டு வருகிறது.

சிறுபான்மை ஆணையத்தின் நோக்கம் 
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம், சிறுபான்மையினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக செயல்பட்டு வருகிறது. 

இந்த ஆணையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருத்தியமைத்து, அதன் தலைவராக எஸ். பீட்டர் அல்போன்ஸை நியமித்து உத்தரவிட்டுள்ளார். 

பீட்டர் அல்போன்ஸ் யார்?
எஸ்.பீட்டர் அல்போன்ஸ் கடந்த 1989 மற்றும் 1991இல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் தென்காசி சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்தும் கடந்த 2006ஆம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கடையநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்தும் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு, சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: 100ஆவது பிறந்த ஆண்டு: நினைவுகூரப்படக்கூடிய முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ்!

Last Updated : Jun 29, 2021, 1:47 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.