சென்னை: இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைச்செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில், 'தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநராகப் பணியாற்றி வந்த கருப்பசாமி அக்டோபர் 31ஆம் தேதி வயது முதிர்வின் காரணமாக பணியில் இருந்து ஓய்வுபெற்றுள்ளார்.
இதனைத்தாெடர்ந்து பணியிடத்திற்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கூடுதல் திட்ட இயக்குநராகப்பணியாற்றி வரும் நாகராஜமுருகன் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு புதிய இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்' என அதில் கூறப்பட்டுள்ளது.
தற்பொழுது தனியார் பள்ளிகள் சட்டத்தின்கீழ் சுயநிதி, சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட தனியார் நிர்வாகத்தில் செயல்படும் அனைத்துப்பள்ளிகளும் கொண்டுவரப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை சாலையை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றக் கோரிய வழக்கில் உத்தரவு