சென்னை : தமிழ்நாட்டில் நெல்லை தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மேற்கண்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர்களாக ஐஏஎஸ் அலுவலர்கள் நியமனம் செய்து மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி,
- காஞ்சிபுரம் - அமுதவல்லி
- செங்கல்பட்டு - சம்பத்
- வேலூரில்- விஜயராஜ் குமார்
- ராணிப்பேட்டை - மதுமதி
- திருப்பத்தூர் - காமராஜ்
- விழுப்புரம் - பழனிசாமி
- கள்ளக்குறிச்சி - விவேகானந்தன்
- திருநெல்வேலி - ஜெயகாந்தன்
- தென்காசி - சங்கர்
ஆகியோர் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதி நாளில் இருந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல் பார்வையாளர்களாக 28 மாவட்டத்திற்கு ஐஏஎஸ் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க : ஊரக உள்ளாட்சி தேர்தல் - வேட்பு மனு தாக்கல் பணி தீவிரம்