ETV Bharat / state

பிஎட் படிப்பிற்கு டிசம்பர் 4 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் அன்பழகன் தகவல்!

பிஎட் படிப்பிற்கு டிசம்பர் 4ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அன்பழகன்
அன்பழகன்
author img

By

Published : Dec 1, 2020, 6:32 PM IST

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் இளங்கலை கல்வியியல் (B.Ed.) பட்டப்படிப்பு சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2020-2021 ம் கல்வியாண்டிற்கான இளங்கலை கல்வியியல் (B.Ed.) பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் 4-12-2020 முதல் 10-12-2020 வரை www.tngasaedu.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.

விண்ணப்பம் பதிவு செய்ய விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்தப்பட வேண்டும். எஸ்.சி, எஸ்டி, விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணம் ரூ.250 மட்டும் செலுத்தினால் போதுமானது. மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது தங்களது விருப்ப வரிசைப் படி கல்லூரிகளை தேர்வு செய்ய வேண்டும்.

மேலும், மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது தங்களின் சான்றிதழ்களை www.tngasaedu.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் வேண்டும். கூடுதல் விபரங்கள் மற்றும் எந்தெந்த கல்லூரிகளில், என்னென்ன பாடப்பிரிவுகள், சேர்க்கை எண்ணிக்கை விவரங்கள் www.tngasaedu.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ளது.

இணையதளத்தில் பதிவு செய்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால் மாணவர்கள் 044-22351014, 044-22351015 மற்றும் 044-28278791 என்ற எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொண்டு கூடுதல் விவரம் மற்றும் வழிகாட்டுதல் பெறலாம்.

இது தொடர்பாக care@tngasaedu.org மற்றும் tndceoffice@gmail.com என்ற email முகவரி மூலமாகவும் மாணவர்கள் சந்தேகங்களை கேட்டு தேவையான வழிகாட்டுதல்களைப் பெறலாம்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.