ETV Bharat / state

கால்நடை மருத்துவ படிப்பிற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

கால்நடை மருத்துவ படிப்பிற்கு நாளை(செப்.09) முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
author img

By

Published : Sep 8, 2021, 7:49 PM IST

சென்னை : 2021-2022 கல்வியாண்டிற்கான இளநிலை கால்நடை பட்டப்படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பில், "2021-2022ஆம் கல்வியாண்டிற்கான கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு (பிவிஎஸ்ஸி & ஏஎச்) மற்றும் பிடெக் படிப்பில் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு, பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு உள்ளிட்ட இளநிலை பட்டப்படிப்புகளின் சேர்க்கைக்கு தமிழ்நாட்டை சார்ந்த மாணவர்களிடமிருந்து நாளை(செப்.09) காலை 10 மணி முதல் அக்டோபர் 8ஆம் தேதி மாலை 6 மணி வரை இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அயல்நாடு வாழ் இந்தியர், அயல்நாடு வாழ் இந்தியரின் குழந்தைகள், உள்ளிட்டோர் நாளை(செப்.09) முதல் காலை 10 மணி முதல் அக்டோபர் 8ஆம் தேதி மாலை 6 மணி வரை இணையதளம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

இணையதள விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். தகவல் தொகுப்பேடு,சேர்க்கைத் தகுதிகள்,தேர்வு செய்யப்படும் முறை, இதர விவரங்களை www.tanuvas.ac.in மற்றும் www2.tanuvas.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளங்களில் பெறலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தொடரும் வருமானவரித்துறை ரெய்டுகள்... மீண்டும் ஆட்டம் காணும் சசிகலாவின் அரசியல் வாழ்க்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.