சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கு சேர்வதற்கு வரும் 12ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்பு சேர்க்கை குழு தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளுக்கான கால்நடை மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளில் சேர்வதற்கு adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தின் மூலம் செப்டம்பர் 12ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
அயல்நாடு வாழ் இந்தியர், அயல்நாடு வாழ் இந்தியரின் குழந்தைகள், அயல்நாடு இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர், மற்றும் அயல் நாட்டினர் ஆகியோருக்கான இட ஒதுக்கீடு விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விபரங்களை http://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ‘அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கப்படும்’ - அமைச்சர் உறுதி