சென்னை: கடந்த மாதம் ஜூன் 20ஆம் தேதி முதல் பொறியியல் படிப்பிற்கான விண்ணப்ப பதிவு ஆன்-லைன் வழியில் தொடங்கியது. ஜூலை 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சிபிஎஸ்சி முடிவுகள் வெளியாவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த 22ஆம் தேதி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில், நேற்று (ஜூலை 27) பொறியியல் படிப்பிற்கான விண்ணப்ப பதிவு முடிவடைந்தது. இதில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 115 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மேலும், 1 லட்சத்து 38 ஆயிரத்து 53 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர தங்களுடைய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருந்தனர்.
அதே சமயம் ஒரு லட்சத்து 67ஆயிரத்து 387 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க கட்டணங்களை செலுத்தியுள்ளனர். இந்த மாணவர்கள் வரும் 29ஆம் தேதிக்குள் தங்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 554 பொறியியல் இடங்கள் உள்ளது.
கடந்தாண்டு 80 ஆயிரத்து 524 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்தனர். இந்த ஆண்டு விண்ணப்பங்கள் அதிகரித்து சான்றிதழ் பதிவேற்றம் செய்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டில் பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம்: விசாரணையில் சில குறைபாடுகள் இருப்பதாகத் தெரிகிறது’