ETV Bharat / state

ஒருங்கிணைந்த மருந்தாளுநர், நர்சிங் தெரபி பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.. செப்.26 முதல் விண்ணப்பம்! - Medical and Homoeopathic Commission of India

2023-2024 ஆம் கல்வியாண்டுக்கான ஒருங்கிணைந்த மருந்தாளுநர் மற்றும் நர்சிங் தெரபி பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த மருந்தாளுநர், நர்சிங் தெரபி பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்..இந்திய மருத்துவம் மற்றும் ஒமியோபதி துறை அறிவிப்பு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 16, 2023, 10:22 AM IST

சென்னை: ஒருங்கிணைந்த மருந்தாளுநர் பட்டயப்படிப்பு மற்றும் நர்சிங் தெரபி பட்டயப்படிப்புகளில் சேர்வதற்கு செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம் அறிவித்துள்ளது.

இது குறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை மற்றும் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள அரசு ஆயுஷ் பாரா மெடிக்கல் பள்ளிகளில் 2023-24 ஆம் ஆண்டிற்கான இரண்டரை ஆண்டுகள் கால அளவுள்ள பட்டயப்படிப்புகளான ஒருங்கிணைந்த மருந்தாளுநர் மற்றும் நர்சிங் தெரபி பட்டயப்படிப்பு பயில்வதற்கான விண்ணப்பங்கள் 12ஆம் வகுப்புத் தேர்வில், அறிவியல் பாடங்களை எடுத்துத் தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

விருப்பமுள்ள மாணவர்கள் படிப்புகளுக்கான விருப்பப்படிவத்துடன் கூடிய விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் அக்டோபர் 4 ஆம் தேதி மாலை 05.00 மணிவரை, www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பப் படிவங்கள் ஆணையர் அலுவலகத்தில், தேர்வுக்குழு அலுவலகத்தில் அல்லது பள்ளிகளில் வழங்கப்படமாட்டாது.

இதையும் படிங்க: மதுரையில் டைடல் பார்க் பணிகள் எப்போது தொடங்கும்? - தென் மாவட்ட இளைஞர்களின் எதிர்பார்ப்பு!

விருப்பப்படிவத்துடன் கூடிய பொது விண்ணப்பப் படிவம் 350 ரூபாய். இக்கட்டணத்தை SBI Collect எனும் இணையதள சேவை மூலமாக செலுத்தி, அதற்குரிய பணப்பரிமாற்ற குறியீட்டு எண்ணையும், அதற்குரிய அசல் இரசீதினையும் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பப்படிவத்துடன் இணைத்து சமர்ப்பிப்பதன் மூலமாக உரிய விண்ணப்பக் கட்டணத்தினை செலுத்தியதாகக் கருதப்படும்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பட்டியல் இனம், பட்டியல் இனம் (அருந்ததியினர்), பழங்குடி இனத்தைச் சார்ந்தவர்கள் விண்ணப்ப படிவத்திற்கான தொகை 350 ரூபாயை செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றனர்.

விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விருப்பப்படிவத்துடன் கூடிய விண்ணப்பப்படிவத்தோடு கேட்கப்பட்டுள்ள அனைத்துச் சான்றிதழ்களின் சுய சான்றொப்பம் இடப்பட்ட நகல்களையும் இணைத்து அக்டோபர் 4ஆம் தேதி மாலை 5 மணிக்குள் "செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஒமியோபதித்துறை ஆணையரகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை 600 106" என்ற முகவரிக்கு தபால் அல்லது கூரியர் சேவையின் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும்.

அஞ்சல் துறையினரால் மற்றும் கூரியர் நிறுவனத்தால் ஏற்படும் காலதாமதம் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பப் படிவங்களை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கட்டணத்தொகையினை பத்தி 3-ல் குறிப்பிட்டுள்ளவாறு இணைத்து அனுப்ப வேண்டும்". இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன் விடுதலை குறித்து எங்கள் கையில் ஏதுமில்லை” - அமைச்சர் ரகுபதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.