இது தொடர்பாக தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய சட்டம் 2008 (எண். 31 டிக 2008), பிரிவு மூன்றில் உள்பிரிவு ஒன்றின்படி தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் மாநில அரசால் அமைக்கப்பட்டது. தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்திற்குத் தலைவர், மூன்று உறுப்பினர்கள் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தால் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான விண்ணப்பப் படிவங்கள், தேவையான தகுதி குறித்த விவரங்கள் www.tn.gov.in/department/30 (Social Welfare and Nutritious Meal Programme Department) என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
மேற்கண்ட பதவிகளுக்குத் தகுதிவாய்ந்த நபர்கள் தலைவர், உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்களை தனித்தனியே உரிய குறிப்பிடப்பட்ட படிவத்தில் அனைத்து விவரங்களையும் பூர்த்திசெய்து, உரிய ஆதார ஆவணங்களுடன் டிசம்பர் 18ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம்.
(முகவரி: உறுப்பினர் செயலர், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம், கலச மஹால், சேப்பாக்கம், சென்னை - 5) முறையாகப் பூர்த்திசெய்யப்படாத விண்ணப்பங்கள், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்த சேராத விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது. தகுதி, அனுபவத்தின் அடிப்படையில் மட்டுமே நியமனம் செய்யப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை இல்லை - கே.எஸ். அழகிரி