ETV Bharat / state

மருத்துவப்படிப்பு இளநிலை முதலாம் ஆண்டு வகுப்பு நவம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்படும்! - Consultation for State Quota Seats

இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு!

author img

By

Published : Oct 4, 2022, 3:46 PM IST

சென்னை: தேசிய மருத்துவ ஆணையம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுத் தேதியினை அறிவித்துள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்ககான கலந்தாய்வு, மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.

அதன்படி அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு முதல் சுற்றுக்கலந்தாய்வு அக்டோபர் 11ஆம் தேதி 20ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. அதில் வரும் 28ஆம் தேதிக்குள் மாணவர்கள் கல்லூரிகளில் சேர வேண்டும். மாநில அளவில் அக்டோபர் 17ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையில் கலந்தாய்வுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது. அதில் நவம்பர் 4ஆம் தேதிக்குள் மாணவர்கள் கல்லூரியில் சேர வேண்டும்.

2ஆம் சுற்றுக்கலந்தாய்வு நவம்பர் 2ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரையில் நடைபெற்று, மாணவர்கள் 18ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும். மாநில அளவில் நவம்பர் 7ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரையில் நடைபெற்று, 21ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும்.

அதனைத் தொடர்ந்து மாப்-ஆப் ரவுண்ட் கலந்தாய்வும், ஸ்டே வேகன்சி கலந்தாய்வும் நடத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் 15ஆம் தேதியில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஊதிய உயர்வுக்காக மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.