ETV Bharat / state

'கலைஞர் எழுதுகோல் விருது' யார் யார் விண்ணப்பிக்கலாம்.. கடைசி நாள் எப்போது? - kalaignar pen award qualification

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த தினமான ஜூன் 3-ஆம் தேதி வழங்கப்பட உள்ள கலைஞர் எழுதுகோல் விருதுக்கு ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

kalaignar pen award
கலைஞர் எழுதுகோல் விருது
author img

By

Published : Apr 8, 2023, 2:18 PM IST

சென்னை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த தினமான ஜூன் 3-ஆம் தேதி வழங்கப்பட உள்ள கலைஞர் எழுதுகோல் விருதுக்கு வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என செய்தி மக்கள் தாெடர்புத்துறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தி மக்கள் தாெடர்புத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஒவ்வோர் ஆண்டும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த தினமான ஜுன் 3 ஆம் நாளன்று, ஒரு சிறந்த இதழியலாளருக்கு 'கலைஞர் எழுதுகோல் விருது' வழங்கி கவுரவிக்கப்படும் என ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில், 2022 ஆம் ஆண்டுக்கான இவ்விருதுக்குரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விருதில் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையுடன், பாராட்டுச் சான்றிதழும் அடங்கும் என்பது குறிப்பிடத்தகது.

கலைஞர் எழுதுகோல் விருதிற்கான தகுதிகள் பின்வருமாறு:-

  • விண்ணப்பதாரர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகவும், தமிழ் இதழியல் துறையில் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளாக தொடர்ந்து பணி புரிகின்றவராகவும் இருக்க வேண்டும்.
  • பத்திரிகைப் பணியை முழுநேரப் பணியாகக் கொண்டிருக்க வேண்டும்.
  • இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், பங்காற்றியிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரரின் எழுத்துகள் பொதுமக்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் நேரடியாகவோ, மற்றொருவர் பரிந்துரையின் அடிப்படையிலோ பணிபுரியும் நிறுவனத்தின் பரிந்துரையின் பேரிலோ விண்ணப்பங்களை அனுப்பலாம். இதற்கென அரசால் அமைக்கப்பட்டுள்ள தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.

மேற்காணும் தகுதிகளைக் கொண்ட விண்ணப்பங்கள், விரிவான தன் விவரங்கள் மற்றும் அவற்றுக்குரிய ஆவணங்களுடன், இயக்குநர் செய்தி மக்கள் தொடர்புத் துறை, சென்னை 600009 என்ற முகவரிக்கு 30.4.2023 தேதிக்குள்ளாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்" என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிவன் மீது சூரிய ஒளிக்கதிர்கள் படும் அதிசய நிகழ்வு; ஏராளமான பக்தர்கள் தரிசனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.