ETV Bharat / state

கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை கடைசி நாள்! - கலை அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை கடைசி நாள்

தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பம் விநியோகம் கடந்த ஜூன் 22ஆம் தேதி தொடங்கி நிலையில் நாளை ஜூலை 7ஆம் தேதி முடிவடைகிறது.

கலை, அறிவியல் கல்லூரிகளில்
கலை, அறிவியல் கல்லூரிகளில்
author img

By

Published : Jul 6, 2022, 8:07 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டில் மாணவர்கள் சேருவதற்கு கடந்த ஜூன் 22ஆம் தேதி முதல் ஜூலை 7ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

இது குறித்து கல்லூரிக் கல்வி இயக்குநர் ஈஸ்வரமூர்த்தி கூறும்போது, "தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான (2022-23) விண்ணப்பங்களை http://www.tngasa.in/ அல்லது http://www.tngasa.org/ என்ற இணையதள முகவரிகளில் பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள் கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து மையங்களிலும் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விண்ணப்பக் கட்டணமாக மாணவர்கள் 50 ரூபாய் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. பதிவு கட்டணம் மட்டும் 2 ரூபாய் செலுத்தினால் போதுமானது.

மேலும், இன்று மாலை 6 மணி வரையில் 3 லட்சத்து 55 ஆயிரத்து 968 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். அவர்களில் 2 லட்சத்து 93 ஆயிரத்து 327 மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்துள்ளனர். இதில், 2 லட்சத்து 60 ஆயிரத்து 643 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர்.

விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலமாக செலுத்தலாம். ஆன்லைன் மூலம் செலுத்த முடியாதவர்கள் சேவை மையங்களில் டிடியாக அளிக்கலாம். மாணவர்கள் சேர்க்கை குறித்த வழிகாட்டுதல் மற்றும் விவரங்கள் அனைத்தும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 044 28260098, 28271911 என்ற எண்ணிலும் தொடர்புக் கொள்ளலாம்" என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 225 பொறியியல் கல்லூரிகள் குறைகளை நிவர்த்தி செய்யாவிட்டால் .. அண்ணா பல்கலை.. துணை வேந்தர் எச்சரிக்கை

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.