சென்னை: நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது. ஆகையால், அதனை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டுமென கேரளா, தெலங்கானா, ஆந்திரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநில முதலமைச்சர்களுக்கு சென்ற நான்காம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
அதில், தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தமிழ்நாடு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை சட்டம் - 2021 சட்ட முன்வடிவு, ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான கமிட்டியினர் அளித்த அறிக்கையின் நகல் ஆகியவை இடம் பெற்றுள்ளது.
இந்த கடிதத்தின் மொழிபெயர்ப்பை பல்வேறு மாநில முதலமைச்சர்களுக்கு நேரில் சென்று வழங்கி தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு கோரவும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவன், இன்று (அக்.12) ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகனை நேரில் சந்தித்து கடித நகலை வழங்கி ஆதரவு கோரினார்.
இதையும் படிங்க: உள்ளாட்சி தேர்தல் - திமுக கூட்டணி முன்னிலை!