ETV Bharat / state

'இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கிறது' - ஓபிஎஸ்

சட்டப்பேரவையில் இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித்தீர்மானத்தை அதிமுக சார்பில் ஓபிஎஸ் ஆதரித்து பேசினார்.

இந்தி திணிப்பிற்கு எதிராக முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கிறது

author img

By

Published : Oct 18, 2022, 3:22 PM IST

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் இந்தி திணிப்புக்கு எதிராக தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தின் மீது அதிமுக சார்பில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ’இந்திக்கு எதிரான போராட்டம் 1930 இல் தொடங்கியது.

சென்னையில் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட நடராஜன் உயிரிழந்தார். மொழி போராட்டத்தின் முதல் களபலி நடராஜன், இதனை தொடர்ந்து தாளமுத்து உயிரிழந்தார். 1940 ஆம் ஆண்டு இந்தி திணிப்பை அரசு திரும்ப பெற்றது. மேலும் இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருக்கும் என பிரதமர் நேரு தெரிவித்ததை தொடர்ந்து இந்தி எதிர்ப்பு போராட்டம் லேசாக ஓய்ந்தது.

1960 ஆம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்தது. போலீஸ் துப்பாக்கி சூடு அதிகரிக்க உயிர் பலிகளும் அதிகரித்தது. வேறு வழியின்றி ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருக்கும் என அப்போதைய ஆட்சியாளர்கள் முடிவு செய்தனர்.

எம்.ஜி.ஆர் ஜெயலலிதா ஆகியோர் தமிழ் மொழி வளர்ச்சிக்கு கொண்டு வந்த திட்டங்களை சொன்னால் அந்த பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 8 ஆவது பிரிவில் உள்ள அனைத்து மொழிகளையும் அலுவல் மொழியாக்க வேண்டும் எனவும் அன்னை தமிழ் மொழியை மீறி இந்தி திணிப்பை தமிழ்நாட்டில் அனுமதிக்கமாட்டோம் என கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கிறது” என பேசினார்.

இதையும் படிங்க: ஓபிஎஸ்-க்கு ஆதரவாக திமுக செயல்படுவது வெட்ட வெளிச்சமாகிவிட்டது - - எடப்பாடி பழனிசாமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.