ETV Bharat / state

எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத் துறை சம்மன்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத் துறை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது.

எம்.ஆர்.விஜயபாஸ்கர்
எம்.ஆர்.விஜயபாஸ்கர்
author img

By

Published : Sep 28, 2021, 4:09 PM IST

Updated : Sep 28, 2021, 5:09 PM IST

சென்னை: முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவருக்குச் சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள் ஜூலை 21ஆம் தேதி அன்று சோதனை நடத்தினர். சோதனையில், அவர் 55 விழுக்காடு அதிகமாக சொத்துகள் சேர்த்தது தெரியவந்தது.

கரூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் எம்.ஆர். விஜயபாஸ்கர், அவரது உறவினர்களுக்கு சொந்தமான நிறுவனங்கள், வீடுகளில் சோதனை செய்ததில் ரூ.25,56,000 ரொக்கப்பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியதாக லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கர் செப்டம்பர் 30ஆம் தேதி நேரில் ஆஜராக லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

இதையும் படிங்க: தேர்தல் முடிந்த கையோடு பள்ளிகளைத் திறக்க உத்தேசம்!

Last Updated : Sep 28, 2021, 5:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.