சென்னையில் இயங்கி வரும் கூட்டுறவு அங்காடியில் நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் விலைக்கு பொருள்கள் விற்பனை செய்வதாக நுகர்வோர் பலர் லஞ்ச ஒழிப்பு துறை காவல்துறையிடம் புகாரளித்தனர்.
புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீரென்று நேற்று (ஜன. 22) திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள நுகர்வோர் கூட்டுறவு சங்கம் அலுவலகம், தாம்பரம், பெரியார் நகர் போன்ற இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் திருவல்லிக்கேணி கூட்டுறவு அங்காடியின் விற்பனை உதவியாளர் சரவணனிடமிருந்து கணக்கில் வராத ரூ. 1.60 லட்சத்தை லஞ்ச ஒழிப்பு துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் தாம்பரம், பெரியார் நகர் அலுவலகங்களில் இருந்து 54,370 ரூபாய் என மொத்தம் 2.15 லட்ச ரூபாயை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பணம், விலையை உயர்த்தி விற்கப்பட்ட பொருள்களின் பணமா? என்பது குறித்து லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் மீண்டும் தலைதூக்கும் ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டம்!