ETV Bharat / state

பள்ளிகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது குறித்து விரைவில் அறிவிப்பு! - tamilnadu schools opening action

சென்னை: மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களை பள்ளிக்கு வர அனுமதிப்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகலாம் என தெரிகிறது.

மாணவர்கள்
மாணவர்கள்
author img

By

Published : Sep 10, 2020, 12:31 PM IST

தமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் முதல் படிப்படியாக பல்வேறு கட்டங்களாக வகுப்புகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையான மாணவர்கள் ஆசிரியர்களை சந்திப்பதற்கு அனுமதிப்பதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

கரோனா காரணமாக, கடந்த ஜூன் மாதம் தொடங்க வேண்டிய நடப்பு கல்வியாண்டு தற்போது வரை திறக்கப்படவில்லை. எனினும் தனியார் பள்ளிகள் ஆன்லைன் வழியிலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாகவும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வகையிலான நடவடிக்கை தற்காலிகமானது.

தவிர, மாணவர்கள் நேரடியாக பள்ளிகளுக்குச் சென்று படிப்பதன் மூலம் மட்டுமே முழுமையான கல்வியைப் பெற முடியும் என கல்வித் துறை கருதுகிறது. எனவே படிப்படியாக வகுப்புகளை தொடங்குவது குறித்து விரைவில் தமிழ்நாடு அரசு முடிவெடுத்து அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு ஏற்கனவே ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையான மாணவர்களை இந்த மாதம் 21ஆம் தேதி முதல் ஆசிரியர்களை சந்திக்கலாம் என அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக பெற்றோர் சம்மதத்துடன் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதன் அடிப்படையில் தமிழ்நாடு கல்வித் துறையின் அறிவிப்பு வெளியாக உள்ளது. தொடர்ந்து அக்டோபர் மாதத்தில் 10, 11 ,12ஆம் வகுப்புகளும், அதைத் தொடர்ந்து படிப்படியாக இதர வகுப்புகளும் தொடங்கப்படும் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கல்வி ஆணையர் தலைமையிலான குழு, ஏற்கனவே பல்வேறு மாற்றங்கள் குறித்த பரிந்துரை அறிக்கையை முதலமைச்சரிடம் வழங்கியிருக்கிறது. மத்திய அரசும் சமூக இடைவெளியுடன் மாணவர்கள் வகுப்பில் அமர வேண்டும் என தெரிவித்திருக்கிறது. எனவே சுழற்சி முறையிலான வகுப்புகளை நடத்துவது குறித்தும் அரசு அறிவிப்பில் இடம்பெறும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது? முதலமைச்சர் விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.