சென்னை: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் ஆய்வுக்கூட்டம், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் நிறுவன தலைமை அலுவலகத்தில் இன்று (மே 18 ஆம் தேதி)நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது, ’’அனுமதி இல்லாமல் செயல்படுகின்ற பால் விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் ஆவின் பால் கையாளும் திறனை நாள் ஒன்றுக்கு 45 லட்சம் லிட்டர் 75 லட்சமாக உயர்த்த இந்த ஆண்டுக்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குறித்த நேரத்தில் ஆவின் பால் வினியோகம் மக்களுக்குச் சென்று அடைவதற்கு தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பால் பொருட்கள் தயாரிக்கும் அனைத்து நிறுவனங்களையும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களால் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். ஆவின் பால் விநியோகத்தில் குறித்த நேரத்திற்கு முன்னதாகவே தமிழக முழுவதும் பால் விநியோகம் செய்வதை உறுதிப்படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் ஆவினில் இனி உறுதியாக மாற்றத்தை பார்ப்பீர்கள்’’ என அவர் குறிப்பிட்டு உள்ளார்.
ஆவின் நிறுவனம், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இடையே பாலமாக விளங்கி வருகிறது. ஆவின் நிறுவனத்தை மேம்படுத்துவதற்கு விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் மற்றும் கருத்துகள் பெறப்பட்டு, அதற்கேற்ப வளர்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தரமற்ற பால் விற்பனை செய்து யாராவது பாதிக்கப்பட்டால் அரசுதான் பதில் சொல்லியாக வேண்டும். அதனால் அனுமதியின்றி பால் விற்பதை தவிர்க்கும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
ஆவின் தண்ணீர் பாட்டில் திட்டம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்ற அதிரடி அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். ஆவின் பொருட்களின் தரம் குறையாது எனவும்; அதே நேரத்தில் நிர்வாகத்தை லாபத்தில் மீட்டெடுக்க அனைத்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்து உள்ளார்.
தற்போது தனியார் நிறுவனங்கள் தண்ணீர் பாட்டிலை விற்பனை செய்து வரும் நிலையில் ஆவின் நிறுவனம் தண்ணீர் பாட்டில் விற்பனை செய்தால் குறைந்த விலையில் தரமான மினரல் வாட்டர் கிடைக்கும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை கடைசி நாள் - மவுசு குறையாத பி.காம்!
இதையும் படிங்க: ஜல்லிக்கட்டுக்குத் தடையில்லை - உச்ச நீதிமன்றம்
இதையும் படிங்க: 50 years of Ulagam Sutrum Valiban: எம்.ஜி.ஆர் என்னும் மந்திரம் செய்த மகத்தான செய்கை!
இதையும் படிங்க: கர்நாடக CMஆக சித்தராமையா, DCMஆக டிகேஎஸ் - வெளியானது அதிகாரப் பூர்வ அறிவிப்பு!