ETV Bharat / state

பயன்பாடில்லாத ஆழ்துளைக் கிணறு: சென்னை குடிநீர் வடிகால் வாரியம் அதிரடி உத்தரவு - ஆழ்துளை கிணறுகளை மூட உத்தரவு

சென்னை: பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகள், முறையாக மூடப்படாத கிணறுகள் உள்ளிட்டவற்றை 24 மணி நேரத்தில் மூடப்பட வேண்டும் என சென்னை குடிநீர் வடிகால் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

borewell closed
author img

By

Published : Oct 30, 2019, 11:09 PM IST

அக்டோபர் 25ஆம் தேதி இரண்டு வயது குழந்தை சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து 80 மணி நேர போராட்டத்திற்கு சடலமாக மீட்கப்பட்டான். சுஜித் மரணம் இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழ்நாடு முழுவதும் மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகள் மழைநீர் சேகரிப்புத் தொட்டியாக மாற்ற வேண்டும் என அரசு அறிக்கை வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துவருகிறது.

இதுபோன்ற மரணம் இனியும் தொடராமலிருக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரப்படுகிறது. இந்நிலையில், பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகள், முறையாக மூடப்படாத கிணறுகள் உள்ளிட்டவற்றை 24 மணி நேரத்தில் மூடப்பட வேண்டும் என சென்னை குடிநீர் வடிகால் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து சென்னை குடிநீர் வடிகால் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சரியாக மூடப்படாமல் கைவிடப்படும் ஆழ்துளைக் கிணறுகளில் சிறுவர்கள் விழுந்து உயிருக்குப் போராடும் அவலநிலை ஏற்படுகிறது. எனவே, மூடப்படாமல் கிடக்கும் ஆழ்துளைக் கிணறுகள் கவனக்குறைவாக உரிமையாளர்கள், ஒப்பந்ததாரார்களின் கவனக்குறைவினை அறிந்து உடனடியாக மூடுவதற்கு சென்னை மாநகரப் பகுதிகளில் உள்ளவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த உத்தரவினை உதாசீனப்படுத்துபவர்கள் மீது சென்னை குடிநீர் வாரியத்தால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவின்படி மேற்கொண்டு தண்டிக்கப்படுவீர்கள்" எனக் குறிப்பிட்டுள்ளது.

Intro:Body:
ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 30.10.19

சரியாக மூடப்படாத ஆழ்துளை கிணறுகள், நீர் வராததால் முறையாக மூடப்படாத கிணறுகள் உள்ளிட்டவற்றை முறையாக மூடிவைக்கப்படாமல் விட்டால் கடும் நடவடிக்கை... சென்னை குடிநீர் வடிகால் வாரியம் உத்தரவு..

சென்னை குடிநீர் வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,
சரியாக மூடப்படாமல் கைவிடப்படும் ஆழ்துளை கிணறுகளில் சிறுவர்கள் விழுந்து உயிருக்குப் போராடும் நிலை தொடர்வதால், அவ்வாறு மூடப்படாமல் உள்ள கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் கவனக்குறைவாக உரிமையாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரார்களின் கவனக்குறைவினை அறிந்து உடனடியாக மூடுவதற்கு சென்னை மாநகர் பகுதிகளில் உள்ளவர்கள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேலும் அவை தொடர்பாக ஆலோசனைகள் அருகில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் கேட்டு அறிந்துகொள்ள முடியும். இந்த உத்தரவினை உதாசீனப்படுத்துபவர்கள் மீது சென்னை குடிநீர் வாரியத்தால் கடுமையான நடவடிக்கைகள் நீதிமன்ற உத்தரவின்படி மேற்கொண்டு தண்டிக்கப்பட்டுவீர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது..

tn_che_02_announcement_of_water_board_7204894Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.