ETV Bharat / state

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் அறிவிப்பு

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடைபெறுகிறது.

f
f
author img

By

Published : Sep 25, 2021, 9:21 AM IST

தமிழ் வளர்ச்சித் துறைக்கான 2021-2022ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பில், நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி , ஜவஹர்லால் நேரு , அண்ணல் அம்பேத்கர் , தந்தை பெரியார் , பேரறிஞர் அண்ணா , முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் கருத்துக்களையும் சமூகச் சிந்தனைகளையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வண்ணம் ஆண்டுதோறும் அவர்களின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சு போட்டிகள் நடத்திப் பரிசு , பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் ' என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி "மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் நாளில் அனைத்து மாவட்டங்களிலும் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்குத் தனித்தனியே பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளது.

போட்டித் தலைப்புகள் போட்டி நடைபெறும் நாளன்று அறிவிக்கப்படும். . போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.

பேச்சுப் போட்டியில் பங்கேற்கும் பள்ளி கல்லூரி மாணவர்களை அந்தந்தக் கல்லூரி முதல்வரே 2 பேர் வீதம் தேர்வு செய்து போட்டிக்கு அனுப்ப வேண்டும்.

பேச்சுப் போட்டியில் வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கும் , பள்ளி மாணவர்களுக்கும் 1. முதல் பரிசு ரூ .5000 / 2. இரண்டாம் பரிசு ரூ .30000 / 3. மூன்றாம் பரிசு ரூ . 2000 / - என்ற வகையில் வழங்கப்படும்.

போட்டி நாள் : 02.10.2021 பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி 10.00 மணி கல்லூரி போட்டி மாணவர்களுக்கான பேச்சுப் - முற்பகல் முதல் பிற்பகல் முதல் 2.00 மணி.

மேலும் இப்போட்டியில் பங்கேற்கும் அரசுப் பள்ளி மாணவர்களிலிருந்து மட்டும் மாவட்டத்திற்கு இருவரைத் தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்புப் பரிசுத் தொகை ரூ .2000 / - வீதம் 2 பேருக்குத் தனியே வழங்கப்படும்.

கல்லூரி , பள்ளி மாணவர்களுக்கான போகப் போட்டிகள் நடைபெறும் இடம் அந்தந்த மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர்/உதவி இயக்குநர் வாயிலாகவும் அறிவிக்கப்படும். மேலும் அரசு அறிவித்துள்ள தீநுண்மி தொடர்பான வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றிப் போட்டிகள் நடத்தப்பெறும்" என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ‘தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சகம் எங்கே?’ - சீமான் கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.