ETV Bharat / state

பாரதிராஜா ராஜினாமா; இயக்குநர் சங்க தேர்தல் தேதி அறிவிப்பு!

author img

By

Published : Jul 8, 2019, 6:29 PM IST

சென்னை: தலைவர் பதவியில் இருந்து பாரதிராஜா ராஜினாமா செய்ததை அடுத்து தமிழ்நாடு இயக்குநர் சங்க தேர்தல் வரும் ஜூலை 21 ஆம் தேதி நடக்க இருப்பதாக ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

இயக்குனர் சங்க தேர்தல் தேதி அறிவிப்பு

சென்னையில், தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கத்தின் தலைவராக ஒருமனதாக மூத்த இயக்குநர் பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தல் இல்லாமல் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதால், இதற்கு சில இயக்குநர் எதிர்ப்பு தெரிவித்ததால் தலைவர் பதவியை பாரதிராஜா ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், கமலா திரையரங்கில் இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், இயக்குனர்பாரதிராஜா, விக்ரமன், ஆர்.கே செல்வமணி, எஸ்.பி. ஜனநாதன், கரு.பழனியப்பன் உள்ளிட்ட இயக்குநர்கள் கலந்து கொண்டனர். அப்போது, பாரதிராஜா குறித்து எஸ்.பி. ஜனநாதன், கரு. பழனியப்பன் ஆகியோர் பேசிய சர்ச்சை கருத்தால், உறுப்பினர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.

இயக்குனர் சங்க தேர்தல் தேதி அறிவிப்பு

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.கே.செல்வமணி, "கடந்த பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் தேர்தல்
நடத்தப்பட உள்ளது. தலைவர் பதவிக்கும் சேர்த்தும் தேர்தல் நடத்தப்படுகிறது. ஜூலை 21 ஆம் தேதி தேர்தல் நடைபெறும். தன்னுடைய பணிச்சுமை காரணமாக தலைவர் பதவியை பாரதிராஜா ராஜினாமா செய்துள்ளார்" என்றார்.

Intro:இயக்குனர் சங்க தேர்தல் வருகிற ஜூலை 21 ஆம் தேதி நடைபெறும் என ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
Body:இயக்குனர் சங்கத்தின் 99 வது பொது குழு கூட்டம் ஜூன் 10 நடைபெற்றது . அந்த பொதுக்குழு கூட்டத்தில் ஒருமனதாக தலைவர் பதவிக்கு பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார் அதனை தொடர்ந்து இயக்குனர் சங்க உறுப்பினர்கள் எதிர்ப்பு காரணமாக தன் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் இயக்குனர் பாரதிராஜா ஜனநாயக முறைப்படி தான் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்றும் பாரதிராஜா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து அவசர பொதுக்குழுக் கூட்டம் வடபழனி கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில் இயக்குனர்கள் பேரரசு, விக்ரமன் , ஆர் கே செல்வமணி , எஸ்.பில். ஜனநாதன், கரு.பழனியப்பன், உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் எஸ்பி ஜனநாதன் மற்றும் கரு பழனியப்பன் பாரதிராஜா குறித்து சர்ச்சை கருத்து வெளிப்படுத்தினார்கள் இதனால் சங்க உறுப்பினர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செயலாளர் ஆர்.கே.செல்வமணி
இயக்குனர் சங்கத்தின் 100 ஆவது பொதுக்குழு கூட்டம் இன்றி நடைபெற்றது, ஏற்கனவே கடந்த பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் தேர்தல்
நடத்தப்படுகிறது, தலைவர் பதவிக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்படுகிறது.

ஜூலை 21 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்ற அவர் பாரதிராஜா அவர்கள் தன்னுடைய பணிச்சுமை காரணமாக தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்றார்.

Conclusion:மேலும்
யார் தலைவராக இருந்தாலும் எங்களுக்கு எப்போதும் தலைவர் பாரதிராஜா தான் என அவர் தெரிவித்தார்.

பேட்டி மோஜோவில் அனுப்புகிறேன்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.