ETV Bharat / state

திமுகவினரின் ஊழல் குறித்து சிபிஐ-யில் வழக்கு தொடர்வேன்: அண்ணாமலை - திமுகவினரின் ஊழல் குறித்து வழக்கு தொடர்வேன்

திமுகவினர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவர்களது சொத்துப்பட்டியலை வெளியிட்ட தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, சிபிஐயில் வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Annamalai
அண்ணாமலை
author img

By

Published : Apr 15, 2023, 6:47 PM IST

சென்னை: திமுகவை சேர்ந்த 12 நிர்வாகிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை கூறிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அவர்களது சொத்துப்பட்டியலையும் நேற்று (ஏப்ரல் 14) வெளியிட்டார். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 15) செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "வெளியிடப்பட்டுள்ள ஊழல் பட்டியலின் அடிப்படையில் அடுத்த வார இறுதிக்குள் டெல்லிக்கு சென்று சிபிஐ-யில் வழக்குப்பதிவு செய்ய உள்ளேன். இதை அப்படியே விடப்போவது இல்லை" என்றார்.

உங்கள் மீது திமுகவை சேர்ந்த உறுப்பினர்கள் வழக்கு தொடர உள்ளதாக கூறியுள்ளார்களே? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, "ஊழல் செய்த பணத்தினை வழக்கறிஞர்களிடம் செலவு செய்ய வேண்டி இருப்பதால் வழக்கு தொடர்வார்கள். எந்த பகுதியில் வழக்குப்பதிவு செய்தாலும் அங்கு நான்கு மணி நேரம் எனக்கு கிடைத்தாலும் என் கட்சியை வளர்ப்பதற்காக பயன்படுத்துவேன். வழக்கு தொடர்ந்தாலும் அதற்கு நான் பயப்பட போவதில்லை. நான் குற்றம் சாட்டிய நிறுவனங்கள், என்னுடையது இல்லை என இதுவரையில் திமுகவினர் யாரும் மறுப்பு தெரிவிக்கவில்லை. அது அவர்களுடையது இல்லை என்றால் மறுப்பு தெரிவிக்கட்டும்.

பட்டியல் வெளியிட்டு 24 மணி நேரம் முடிந்த நிலையில் இதுவரையில் யாரும் மறுப்பு தெரிவிக்கவில்லை. இன்னும் பல ஆதாரங்களுடன் பட்டியல் வெளியிட தயாராக இருக்கின்றோம். ஊழல் செய்த யாரும் தப்பிச் செல்ல முடியாது. என்னிடம் பூச்சாண்டி வேலை எல்லாம் காட்ட வேண்டாம். இதையெல்லாம் ஒன்றும் தெரியாதவர் அரசியலுக்கு வந்தால் அவரிடம் சொல்லலாம். அவரை மிரட்டியும் உருட்டியும் பார்க்கலாம். என்னிடம் உங்கள் உருட்டலும் மிரட்டலும் வேலைக்காகாது. ஆர்.எஸ்.பாரதி மட்டுமல்ல, அவர் தந்தையே வந்தாலும் சந்திக்க தயார். எங்கும் தப்பி எல்லாம் செல்ல முடியாது. என்னுடைய போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும். 100 வருடம் வாழப்போவதில்லை. இன்றோ, நாளையோ மரணம் நம்மை தழுவுவது உறுதி. அதனால் எந்த அச்சுறுத்தல் வந்தாலும் நான் பயப்பட போவதில்லை" என கூறினார்.

இதையும் படிங்க: இருதரப்பினர் மோதல்; காவல் நிலையத்தின் மீது கல்வீச்சு-70 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.