சென்னை: 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு தேர்தலுக்கு முன்பாக பேசிய பிரதமர் மோடி, வெளிநாட்டில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்டு ஒருவருக்கு 15 லட்சம் ரூபாய் வழங்கலாம் என்று கூறிய விவகாரத்தில் திமுகவிற்கும், பாஜகவிற்கும் கடுமையான வார்த்தை மோதல்கள் ஏற்பட்டுள்ளன. கறுப்புப் பணத்தை மீட்டு ரூ.15 லட்சம் வங்கி கணக்கில் செலுத்துவேன் என கூறிய பிரதமர் மோடி, இதுவரை 15 லட்சம் ரூபாய் கூட வேண்டாம், 15 ரூபாயாவது கொடுத்தார்களா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு, கறுப்புப் பணத்தை மீட்டினால் ஒவ்வொருவருடைய வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்தும் அளவிற்கு கறுப்புப் பணம் உள்ளது என்றுதான் கூறினார் என முதலமைச்சர் வைத்த குற்றச்சாட்டுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மறுப்பு தெரிவித்தார். மேலும், 15 லட்சம் ரூபாய் வழங்குவேன் என பிரதமர் மோடி பேசியதற்கான ஆதாரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட வேண்டும், இல்லையெனில் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து, வானதி சீனிவாசன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கறுப்புப் பணத்தை மீட்டினால் 15 லட்சம் ரூபாய் ஒவ்வொருவருடைய வங்கி கணக்கிலும் செலுத்துவேன் என மோடி கூறினார். இன்னும் செலுத்தவில்லை, அப்படியானால் கறுப்புப் பணத்தை மீட்கவில்லை என்றுதானே அர்த்தம் என்று கூறினார். அப்படி சொல்லவில்லை என்றால் மக்களிடம் இதை தெளிவுபடுத்துங்கள் என்று கூறிய உதயநிதி ஸ்டாலின், கறுப்புப் பணத்தை மீட்கவில்லை என்றால் 1,000, 500 ரூபாய் நோட்டுகளை ஏன் செல்லாது? என அறிவித்தீர்கள் என்று கேள்வியெழுப்பினார். தற்போது 2,000 ரூபாய் நோட்டை செல்லாது எனவும் அறிவித்துள்ளதாகவும்” அவர் தெரிவித்துள்ளார்.
-
அமைச்சர் திரு @Udhaystalin, தினமும் 15 லட்சம் 15 லட்சம் என்று சொல்லாத ஒன்றைச் சொல்லி புலம்பி வருவதாக அறிகிறேன்.
— K.Annamalai (@annamalai_k) July 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
ஆட்சிக்கு வந்து ஒரே ஆண்டில், 30,000 கோடி ரூபாய் கொள்ளை அடித்த பெருமை வாய்ந்த, கோபாலபுர குடும்பத்தின் இளவரசருக்கு ஒரு கேள்வி.
சிரித்து மழுப்பாமல் பதில் சொல்ல…
">அமைச்சர் திரு @Udhaystalin, தினமும் 15 லட்சம் 15 லட்சம் என்று சொல்லாத ஒன்றைச் சொல்லி புலம்பி வருவதாக அறிகிறேன்.
— K.Annamalai (@annamalai_k) July 12, 2023
ஆட்சிக்கு வந்து ஒரே ஆண்டில், 30,000 கோடி ரூபாய் கொள்ளை அடித்த பெருமை வாய்ந்த, கோபாலபுர குடும்பத்தின் இளவரசருக்கு ஒரு கேள்வி.
சிரித்து மழுப்பாமல் பதில் சொல்ல…அமைச்சர் திரு @Udhaystalin, தினமும் 15 லட்சம் 15 லட்சம் என்று சொல்லாத ஒன்றைச் சொல்லி புலம்பி வருவதாக அறிகிறேன்.
— K.Annamalai (@annamalai_k) July 12, 2023
ஆட்சிக்கு வந்து ஒரே ஆண்டில், 30,000 கோடி ரூபாய் கொள்ளை அடித்த பெருமை வாய்ந்த, கோபாலபுர குடும்பத்தின் இளவரசருக்கு ஒரு கேள்வி.
சிரித்து மழுப்பாமல் பதில் சொல்ல…
இதனையடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்திற்கு பதிலளித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில், “அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தினமும் 15 லட்சம் 15 லட்சம் என்று சொல்லாத ஒன்றைச் சொல்லி புலம்பி வருவதாக அறிகிறேன். ஆட்சிக்கு வந்து ஒரே ஆண்டில், 30,000 கோடி ரூபாய் கொள்ளை அடித்த பெருமை வாய்ந்த, கோபாலபுர குடும்பத்தின் இளவரசருக்கு ஒரு கேள்வி. சிரித்து மழுப்பாமல் பதில் சொல்ல வேண்டும். 1000 கோடி ரூபாய் ஊழலுக்கு பேர்போன துபாய் நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் குழும நிறுவனமான நோபல் ப்ரிக்ஸ் நிறுவனமும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையும் ஒரே விலாசத்தில் எப்படி இயங்கி வருகிறது என்பதை தெளிவுபடுத்துவீர்களா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு அரசு இன்னும் ஓரிரு வாரங்களில் கலைக்கப்படலாம்.. எச்.ராஜா!