ETV Bharat / state

ஆசிரியர்களுக்கு ஆதரவாக பாஜக சார்பில் வரும் 15ஆம் தேதி போராட்டம் - அண்ணாமலை எச்சரிக்கை

author img

By

Published : May 12, 2023, 10:58 PM IST

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழ்நாடு அரசு சுமூகமான முடிவு எடுக்கவில்லை என்றால் வருகின்ற 15ஆம் தேதி பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் 2013ஆம் ஆண்டு (TET) ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கங்கள் ஒன்றிணைந்து, திமுக தேர்தல் வாக்குறுதி 177-ஐ நிறைவேற்ற வேண்டும், ஆசிரியர் நியமனத்தில் நிர்ணயிக்கப்பட்ட வயது உச்சவரம்பை 57 வயதாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்டவர்கள் 4ஆவது நாளாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேரடியாக வந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுடன் கலந்துரையாடி தனது ஆதரவை தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கம் சார்பில் நான்காவது நாளாக தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு முன்பு கூட வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டபோது நமது கட்சியின் சார்பில் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

அவர்களின் கோரிக்கைகள் மீது மாநில அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் இன்று டிபிஐ வளாகத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் குறிப்பாக கழிப்பறை, குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்கள் தேர்தல் வாக்குறுதி 177-ல் கூறியபடி டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வழங்குவதாக திமுக ஆட்சி தெரிவித்திருந்தது. இரண்டு வருடங்களாகியும் இன்னும் அந்த வாக்குறுதி நிறைவேற்றவில்லை. ஆகவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவு கொடுப்பதற்காக பாஜக வந்துள்ளது.

இன்னும் 48 மணி நேரத்தில் திமுக அரசு இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவை அளிக்க வேண்டும் என மாநில அரசை வேண்டுகிறோம். இல்லையென்றால் அவர்களின் போராட்டத்தில் பாஜக சேரும் நிலை உருவாகும். மிகப்பெரிய அளவில் இவர்களுக்கு ஆதரவாக போராட்டத்திற்கு தயாராகியுள்ளோம். நானும் போராட்டத்தில் கலந்து கொள்வேன். ஈரோடு இடைத்தேர்தலில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கேட்டதன் பேரில் இவர்கள் அன்று கலைந்து சென்றனர்.

ஏற்கனவே 26 ஆயிரம் டெட் தேர்வில் தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்களாக உள்ளனர். மீதமுள்ள 2013 டெட் பட்டதாரிகளுக்கு வேலை வழங்க வேண்டும். திமுக அரசு செய்வதாக கூறிய வாக்குறுதியை செய்யவில்லை. அதற்காக இவர்களுக்கு ஆதரவாக பாஜக சார்பில் 15ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: பாஜகவும், காங்கிரசும் அதிமுகவுக்கு நண்பர்கள் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.