ETV Bharat / state

அண்ணாமலை வெளியிட்ட DMK Files; கவனம் பெற்ற ஈடிவி பாரத்தின் சிறப்பு செய்தி!

அண்ணாமலை வெளியிட்டுள்ள DMK Files வீடியோவில் நமது ஈடிவி பாரத்தின் சிறப்பு செய்தி மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

அண்ணாமலை வெளியிட்ட DMK Files-இல் கவனம் பெற்ற ஈடிவி பாரத்தின் சிறப்பு செய்தி

author img

By

Published : Apr 14, 2023, 9:02 PM IST

சென்னை: திமுகவின் முக்கியப் பிரமுகர்களின் சொத்துப் பட்டியலை DMK Files என்ற பெயரில் இன்று(ஏப்.14) பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இதில் திமுகவைச் சேர்ந்த 17 பிரமுகர்களின் 1.31 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துப் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதில் திமுகவில் இருக்கக்கூடிய தலைவர்களின் தேர்தல் பிராமணப் பத்திரத்தில் கொடுத்துள்ள சொத்து விவரம், மேலும் தற்போது அவர்கள் அல்லது அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் பெயரில் இருக்கக்கூடிய சொத்து பட்டியலை வீடியோ வடிவத்தில் தயார் செய்து திரையிடப்பட்டிருந்தது.

இதில் ஒவ்வொரு சொத்துப்பட்டியலை வெளியிடும்போதும் ஏதோ ஒரு ஆவணம் மேற்கோள் காட்டப்பட்டிருந்தது. இதில் டாஸ்மாக் குறித்து சொத்துப் பட்டியலை வெளியிடும்போது மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆண்டிற்கு ரூ.10,000 கோடி அளவிற்கு வசூல் செய்கிறார் எனக் குறிப்பிடபட்டிருந்தது. இதில் நமது ஈடிவி பாரத் செய்தி குழுமத்தால் கடந்த ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி வெளியிடப்பட்ட சிறப்பு செய்தி இடம்பெற்றுள்ளது. 'டெண்டர் குழப்பம்: தள்ளாடும் டாஸ்மாக் பார்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட சிறப்பு செய்தியை டாஸ்மாக் குறித்த சொத்துப் பட்டியலை வெளியிடும்போது ஆவணமாக மேற்கோள் காட்டியுள்ளனர்.

பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுகவின் சொத்துப் பட்டியலை வெளியிடும் நிகழ்வில் ஈடிவி பாரத்தின் சிறப்பு செய்தியை மேற்கோள் காட்டியிருப்பது மீண்டும் அந்த சிறப்பு செய்திக்கான பார்வையாளர்களை அதிகரித்துள்ளது.

அண்ணாமலை வெளியிட்டுள்ள ஆவணங்கள் குறித்த கேள்விகளுக்கு அவர் அடுத்த வாரம் பதிலளிப்பதாக கூறினார். இதனால், அண்ணாமலை வெளியிட்டுள்ள சொத்துப் பட்டியலின் உண்மைத் தன்மையை அறிய அதிகம் தேடப்படும் செய்தியில் இந்த சிறப்பு செய்தியானது இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த சிறப்பு செய்தி பாஜகவிற்கு ஆதரவான சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டெண்டர் குழப்பம்: தள்ளாடும் டாஸ்மாக் பார்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.