கரூர் மாவட்டத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் அண்ணாமலை. தனது கிராமத்திலேயே இளங்கலை பட்டப்படிப்பு படித்த முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்.
கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த இவர், ஐஐஎம் லக்னோவின் எம்பிஏ படித்தார். இதன் பிறகே இவர் மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
அதன் பிறகு, கர்நாடகாவில் ஐபிஎஸ்ஆக பணியாற்றினார். கடந்த 2019ஆம் ஆண்டு ஐபிஎஸ் பணியிலிருந்து ராஜினாமா பெற்று, தனது சொந்த ஊரில் விவசாயம் செய்தார்.
'Stepping Beyond Khaki: Revelations of a Real-Life Singham' என்ற நூலை எழுதியுள்ளார். கடந்தாண்டு ஆகஸ்ட்டில் பாஜாகவில் இணைந்த அண்ணாமலை, அக்கட்சியின் மாநிலத் துணை தலைவர் பதவியைப் பெற்றார்.
இதன் பிறகு கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அத்தொகுதியில் திமுக வேட்பாளர் ஆர்.இளங்கோ வெற்றி பெற்றார்.
நேற்று (ஜூலை 7) ஒன்றிய அரசு அமைச்சரவையை விரிவாக்கம் செய்தது. அமைச்சரவை விரிவாக்கத்தில், தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகனுக்கு தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
இதனையடுத்து துணைத் தலைவராக இருந்த அண்ணாமலை, கட்சியின் மாநிலத் தலைவராக இன்று முதல்(ஜூலை 8) செயல்படுவார் என பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்தார்.
இதையும் படிங்க:’அஞ்சலி பாப்பா’வாக மாறிய அனிதா ராதாகிருஷ்ணனால் சிரிப்பலை