சென்னை: அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் வேல்ராஜ் நேற்று (நவ.1) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “ஆராய்ச்சி எனக் கூறினால் நிறையத்துறைகள் இணைந்து தான் ஆராய்ச்சியை உருவாக்க முடியும்.
மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் தொழில்நுட்பம், கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் என எல்லாத்துறைகளும் சேர்ந்துத்தான் புதிய கண்டுடிப்பிடிப்புகளை உருவாக்க முடியும். அதைக் கருத்தில் கொண்டு ஆராய்ச்சி மையங்களை அதிகளவில் ஆரம்பிக்க உள்ளோம்.
முக்கியத் துறைகள்
சமுதாயத்திற்கு ஆறு துறைகள் முக்கியமாக இருக்கிறது. விவசாயம், மருத்துவம், எரிச்சத்தி, சுற்றுச்சூழல், மூலப்பொருட்கள் மற்றும் புதிய உற்பத்தி, எமர்சிங் டெ்க்னாலாஜி (வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள்) ஆயத்துறைகள் சமுதாயத்தைச் சார்ந்தது. இந்தத்துறைகள் சமுதாய வளர்ச்சிக்கும் தேவையாக இருக்கிறது.
சமுதாயத்தின் வளர்ச்சிக்குப் பயன்படும் வகையில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளோம். அண்ணாப் பல்கலைக் கழகத்தில் சமுதாயத்திற்குப் பயன்படும் வகையில் 50 ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
ஒன்றிய, மாநில அரசின் நிதியுதவியுடன் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், ஒன்றிய அரசின் நிதியுதவியுடன் எலக்ட்ரிக்கல் வாகனம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் நான்கு ஆண்டில் எலக்ட்ரிக்கல் வாகனம் பயன்பாட்டிற்கு வரும்.
ஆராய்ச்சி
அண்ணா பல்கலைக் கழகத்தில் தற்பொழுது ட்ரோன், மின்சார வாகனம், எனர்ஜி ஸ்டோரேஜ் ஆகிய துறைகளில் ஆராய்ச்சி நன்றாக இருக்கிறது. மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் ட்ரோன், கிண்டி பொறியியல் கல்லூரியில் மின்சார வாகனம், எனர்ஜி ஸ்டோரேஜ் ஆகியவற்றில் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. பயோ டெக்னாலாஜி மற்றும் எலக்ட்ரிக்கல் துறையும் சேர்ந்து மெடிக்கல் கருவிகள் உருவாக்குவதற்கான ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.
எனர்ஜி ஸ்டோரோஜ் என்பது கடந்த 100 ஆண்டுகளில் நிலக்கரி, ஆயில் ஆகியவற்றை வைத்துத்தான் நாம் மின்சாரம் உற்பத்தி செய்கிறோம். கடந்த 10 ஆண்டுகளாகச் சுற்றுச்சூழல் பாதிக்கப்படக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, சூரிய ஒளி மற்றும் மரபு சாரா எரிசக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்கிறோம்.
சூரிய ஒளி எட்டு மணி நேரம் கிடைக்கும். காற்றாலை மின் உற்பத்திக்குத் தேவையான காற்று நான்கு மாதம் கிடைக்கும். அதன் பின்னர் கிடைக்காது. இதனால் தொடர்ந்து மின் விநியோகம் அளிக்க முடியாது. எனவே மின்சாரத்தைச் சேமித்து வைக்க வேண்டும்.
கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க மையங்கள்
அதற்கு பேட்டரி மூலம் சேமிப்பது என்பது ஒரு முறையாகும். அதேநேரத்தில் தெர்மல் ஸ்டோரேஜ் முறையிலும் சேமித்து வைக்கலாம். இந்த முறையை எல்லா கட்டிடங்களிலும் பயன்படுத்தலாம்.
சூரிய ஒளியைப் பயன்படுத்தி தயார் செய்யப்படும் மின்சாரத்தைச் சேமித்து வைக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்ட பின்னர், அதிகளவில் சூரிய மின் உற்பத்தியைச் செய்து பயன்படுத்த முடியும்.
அண்ணாப் பல்கலைக் கழகத்திலும் புதியக் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கத் தேவையான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தொழில் முனைவோர்களையும் உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிறந்த தினமா? பெயர் வைத்த தினமா? - சீமான் கேள்வி