ETV Bharat / state

தமிழ்நாடு ஆளுநருடன் துணைவேந்தர் சூரப்பா சந்திப்பு?

author img

By

Published : Dec 9, 2020, 12:10 PM IST

சென்னை: ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா சந்தித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆளுநருடன் துணைவேந்தர் சூரப்பா
ஆளுநருடன் துணைவேந்தர் சூரப்பா

பல்கலைக்கழக வேந்தரும், ஆளுநருமான பன்வாரிலால் புரோகித்தை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா சந்தித்து தனது நிலை குறித்து விளக்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

துணைவேந்தர் சூரப்பா மீது ஊழல் புகார் சுமத்தப்பட்டது. இது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்திவருகின்றனர். பதிவாளர் கருணாமூர்த்தி நேற்று (டிச. 08) விசாரணைக் குழு முன்பு முன்னிலையாகி சம்பந்தப்பட்ட ஆவணங்களை வழங்கினார்.

இந்நிலையில், சமீபத்தில் ஆளுநரை, துணைவேந்தர் சந்தித்து தமிழ்நாடு அரசு தன் மீது எடுத்துள்ள நடவடிக்கை குறித்தும், தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்பது குறித்தும் தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தான் எந்தவித முறைகேடுகளிலும் ஈடுபடவில்லை எனத் தனது தரப்பை விளக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

இதைத் தொடர்ந்தே ஆளுநர், தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் எழுதியதாகவும் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2018ஆம் ஆண்டு துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்ட பின், புதிய நியமனங்கள், அண்ணா பல்கலை.,க்கு உபகரணங்கள் வாங்கியது, பண பரிவர்த்தனை உள்ளிட்ட ஆவணங்கள் தாக்கல்செய்யப்பட்டுள்ளன.

இது தவிரவும் கூடுதல் ஆவணங்களை விசாரணை அலுவலர்கள் கேட்டுள்ளனர். நியமனங்கள் குறித்து சட்ட ரீதியாகவும், நியமனத்தின் விதிகளும் பின்பற்றப்பட்டுள்ளனவா? எனவும் அலுவலர்கள் விசாரித்துவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.