தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க. ஸ்டாலினுக்கு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ”தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அமோக வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்ற மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். தமிழ்நாட்டின் உயர் கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப கல்வித்துறை தங்களின் ஆட்சிக்காலத்தில் மேலும் உயர்ந்த நிலையை அடையும்.
அதேபோல் உயர் கல்வித்துறை அமைச்சராக பொன்முடி பதவி ஏற்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏற்கனவே கல்வியாளராக உள்ளவர்வரும், உயர்கல்வித்துறையின் அமைச்சராகவும் பணியாற்றிவர் பதவி ஏற்கிறார். உயர்கல்வித்துறை மற்றும் தொழில்நுட்பக் கல்வித்துறையும் மேம்பாடு அடையும்.
புதிய அரசு ஊழலற்ற நிர்வாகத்தை வழங்கும் என எதிர்பார்க்கிறோம். மேலும் புதிய துணைவேந்தரையும் அண்ணாப் பல்கலைக் கழகதத்திற்கு விரையில் நியமனம் செய்ய வேண்டும்” என அதில் கூறியுள்ளனர்.