ETV Bharat / state

அண்ணா பல்கலை.பாடத்திட்டம்... பொறியியல் படிப்பில் கட்டாயப்பாடத்தை அதிகரிக்க கோரிக்கை - கட்டாயப் பாடங்கள்

அண்ணா பல்கலைக்கழகத்தில் திருத்தி அமைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கட்டாயப்பாடங்கள் போதுமானதாக இருக்காது எனவும், கூடுதலாக பாடத்திட்டங்களை அறிமுகம் செய்ய வேண்டும் எனவும் கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்ணா பல்கலை.பாடத்திட்டம்... பொறியியல் படிப்பில் கட்டாயப்பாடத்தை அதிகரிக்க கோரிக்கை

author img

By

Published : Aug 24, 2022, 4:26 PM IST

Updated : Aug 24, 2022, 7:43 PM IST

சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் பாடத்திட்டங்களை புதிதாக மாற்றி அமைத்துள்ளது. அதன் இறுதியாண்டில் கட்டாயப்பாடங்கள் என்கிற தலைப்பில் ஒன்பது பாடங்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இறுதி ஆண்டு மாணவர்கள் அவற்றில் இரண்டு பாடங்களை கட்டாயம் படிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் யோகா, ஆயுர்வேதா, சித்தா, திரை மதிப்பிடல், இலக்கிய கூறுகள் உள்ளிட்டப் பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அண்ணா பல்கலை.பாடத்திட்டம்... பொறியியல் படிப்பில் கட்டாயப்பாடத்தை அதிகரிக்க கோரிக்கை
அண்ணா பல்கலை.பாடத்திட்டம்... பொறியியல் படிப்பில் கட்டாயப்பாடத்தை அதிகரிக்க கோரிக்கை

இதுகுறித்து கல்வியாளர் நெடுஞ்செழியன் கூறியதாவது, 'அண்ணா பல்கலைக்கழகம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள கட்டாயப்பாடங்கள் போதாது. மாணவர்களுக்குக்கூடுதல் வாய்ப்பினை ஏற்படுத்தும் வகையில் பாடங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழகம் நடப்புக்கல்வி ஆண்டில் கொண்டு வரவுள்ள தமிழர் மரபு, தமிழர்களும் தொழில்நுட்பமும் உள்ளிட்ட பாடங்களைப்போலவே வெளிநாடுகளிலும் அந்தந்த நாடுகளின் கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை மாணவர்கள் உயர்கல்வியில் பயில்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் ஐஐடி, என்ஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் இருப்பதைப்போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிக்கும் மாணவர்கள் சமூகவியல், பாெருளாதாரம் போன்றவை குறித்தும் படித்து தெரிந்து கொள்கின்றனர்.

பொறியியல் படிப்பில் தமிழ்களின் தொழில்நுட்பம் பகுதியில் கல்லணை, பண்டைய கோயில்கள் போன்றவற்றில் செய்யப்பட்டுள்ள தொழில்நுட்பங்களைத் தெரிவிக்க வேண்டும். மேலும் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பாடத்திட்டங்களை கற்பிப்பதற்குத் தேவையான ஆசிரியர்கள் கிடைப்பதிலும் சிரமம் இருக்கும். எனவே, அந்தத்துறையில் திறமையானவர்களைக் கண்டறிந்து பயன்படுத்தலாம். குறிப்பாக யோகா கலையில் சிறந்தவர்களைப் பயன்படுத்தி கற்பிக்கலாம்’ எனத் தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக் கழகத்தில் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பாடத்திட்டம் குறித்து கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறும்போது,”அண்ணா பல்கலைக்கழகம் பாடத்திட்டத்தை மாற்றி அமைத்துள்ளது. பாடத்திட்டம் நடப்புக் கல்வியாண்டு முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பாடத்திட்டம் தொழிற்சாலையை சார்ந்ததாக அமைக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலையில் சாதிக்க வேண்டும் என்றால் மேலும் பலவற்றை கற்றுக் கொள்ள வேண்டும்.

தமிழக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் தொழில் திறனை வளர்க்கும் வகையிலும், வெளிநாட்டு மொழிகளை கற்கும் வசதியும், ஆங்கிலம் தொடர்பும் கொண்டு வரப்பட்டுள்ளது. படிப்பதற்கும், தொழிற்சாலைக்கும் உள்ள இடைவெளியை குறைக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழகத்தில் இளங்கலையில் இரட்டைப் பட்டம்

Last Updated : Aug 24, 2022, 7:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.