ETV Bharat / state

போலி முனைவர் பட்டம் பெற்ற ஆசிரியர்கள்: தகவல் விரைவில்...

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றிவரும் ஆசிரியர்களில் 100-க்கும் மேற்பட்டவர்கள், போலி முனைவர் பட்டங்களைச் சமர்ப்பித்துள்ளனர். அவர்களின் தகவல் விரைவில் வெளியாகும் என அண்ணா பல்கலைக்கழக அலுவலர் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Mar 10, 2020, 10:42 AM IST

அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்ட அறிக்கை
அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்ட அறிக்கை

அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தினை பெற்று செயல்படும் கல்லூரிகளில் ஆசிரியர்கள், முதல்வர்கள் ஆகிய பணியில் உள்ளவர்கள் போலியான முனைவர் பட்டச் சான்றிதழை அளித்து பணியில் சேர்ந்துள்ளதாகப் புகார்கள் வந்தன. அதனைத் தொடரந்து அண்ணா பல்கலைக்கழகம் சிலரின் முனைவர் சான்றிதழ்களை ஆய்வுசெய்தபோது அவை போலியானவை எனக் கண்டறியப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அனைத்துக் கல்லூரிகளிலும் பணிபுரியும் பேராசிரியா்களின் முனைவர் பட்டச் சான்றிதழின் உண்மைத் தன்மையை ஆய்வுசெய்வதுடன், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து உண்மைத்தன்மை சான்றை பெற்று மாா்ச் 16ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் எனப் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளா் கருணாமூர்த்தி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியதாவது:

2020-21ஆம் கல்வியாண்டு இணைப்பு அங்கீகாரத்தைப் பெறுவதற்கான விவரங்களைப் பொறியியல் கல்லூரிகள் பல்கலைக்கழகத்திடம் பதிவேற்றம் செய்துவரும் நிலையில், சில பேராசிரியா்களின் ஆதார், வருமான வரி நிரந்தர கணக்கு எண் விவரங்கள் தவறானதாக உள்ளன. எனவே, இந்த விவரங்களைப் பதிவேற்றம் செய்வதற்கு முன்பாக அசல் ஆவணங்களுடன் சரிபாா்த்த பின்னரே பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேலும், வெவ்வேறு பல்கலைக்கழகங்களிடமிருந்து முனைவர் பட்டங்களைப் பெற்றிருக்கும் சில பேராசிரியா்கள், இரண்டுக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் பணிபுரிவதாகவும் தகவல்கள் தெரிய வந்திருக்கின்றன. மேலும், சிலா் போலி முனைவர் பட்டங்களைச் சமா்ப்பித்து பணியில் இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

எனவே, அனைத்துக் கல்லூரிகளிலும் தங்களிடம் பணிபுரியும் பேராசிரியா்களின் முனைவர் பட்டம் குறித்து சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திடம் அதற்கான உண்மைத்தன்மைச் சான்றிதழைப் பெற்று, ஆய்வுக் குழுவிடம் சமர்ப்பித்து, ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அதன்பின்னா் சான்றொப்பமிட்ட உண்மைத்தன்மைச் சான்றையும், முனைவர் பட்டச் சான்றையும் அண்ணா பல்கலைக்கழகத்திடம் மாா்ச் 16ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் அலுவலர் ஒருவர் கூறும்போது, “தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களில் 100-க்கும் மேற்பட்டவர்கள் போலி முனைவர் சான்றிதழ்களை அளித்து பணியிலிருந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் ஆசிரியர்களின் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை ஆய்வுசெய்ய உத்தரவிட்டோம்.

அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்ட அறிக்கை
அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்ட அறிக்கை

அப்போது சில தனியார் கல்லூரிகளில் போலி முனைவர் சான்றிதழ் அளித்து பணியில் உள்ளது தெரியவந்துள்ளது. அதேபோல் அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை அளிப்பதற்கான ஆய்வின்போது ஆசிரியர்களின் பான் எண், ஆதார் எண் ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறியுள்ளோம். அவர்கள் அளிக்கும் எண்கள் ஆன்லைன் மூலம் ஆய்வுசெய்யப்படுகிறது. இதனால், போலியாக ஆசிரியர்களைத் தனியார் பொறியியல் கல்லூரிகள் கணக்கு காட்ட முடியாது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழகத்தில் 300 பேராசிரியர்கள் நியமிக்கத் திட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.